search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்சி -  வெஸ்ட் ஹாம் யுனைடெட் மோதிய ஆட்டம்
    X
    செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைடெட் மோதிய ஆட்டம்

    செல்சி, லெய்செஸ்டர் சிட்டி அணிகள் சாம்பியன் லீக் வாய்ப்பை இழக்கும் அபாயம்

    பிரிமீயர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் செல்சி, லெய்செஸ்டர் சிட்டி அணிகள் தோல்வியடைந்ததால் சாம்பியன் லீக் வாய்பபை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கும் ஒன்று. ஏற்கனவே இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி 2-3 என வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதேபோல் லெய்செஸ்டர் எவர்டன் அணியிடம் தோல்வியடைந்தது. லெய்செஸ்டர் ஜனவரியில் இருந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முன் சிறப்பாக விளையாடி வந்தது.

    தற்போது புள்ளிகள் பட்டியலில் லிவர்பூல் 86 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 63 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. லெய்செஸ்டர் சிட்டில் 55 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செல்சி 54 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    மான்செஸ்டர் யுனைடெட், வோல்ஸ் அணிகள் 52 புள்ளிகள் பெற்ற முறையே ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறும்.

    இன்னும் 6 போட்டிகளில் உள்ளன. செல்சியும், லெய்செஸ்டர் சிட்டியும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோற்றால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும். இதனால் இரண்டு அணிகளும் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
    Next Story
    ×