search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி வில்லியர்ஸ்
    X
    டி வில்லியர்ஸ்

    டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன், இவருக்கு இடமில்லை

    டி வில்லியர்ஸ் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஐபிஎல் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணிக்கு தல டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட் மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.

    ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். நண்பரும், இந்திய அணியின் கேப்டனும், ஆர்சிபி-யின் சக வீரருமான விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்ற அழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்கவில்லை.

    அவரது அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

    1. எம்எஸ் டோனி (கேப்டன்), 2. சேவாக், 3. ரோகித் சர்மா, 4.  விராட் கோலி, 5, டி வில்லியர்ஸ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜடேஜா, 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. ரபடா, 11, பும்ரா.
    Next Story
    ×