search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷசாங்க் மனோகர்
    X
    ஷசாங்க் மனோகர்

    ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார் ஷசாங்க் மனோகர்

    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் விடைபெற்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷகாங்க் மனோகர், பின்னர் ஐசிசி உறுப்பினராகி, தலைவராக பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்த பின்னர், மேலும் இரண்டரை காலம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் இன்று ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார். இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் ஷசாங்க் மனோகர் விலகியுள்ளார். அடுத்த வாரம் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

    ஐசிசி தலைமை நிர்வாகி மானு சாவ்னெய் கூறுகையில் ‘‘ஐசிசி போர்டு, ஸ்டாஃப்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட் குடும்பம், நான் ஆகியோர் ஐசிசி தலைவர் பதவில் சிறப்பாக செயல்பட்ட ஷசாங்க் மனோருக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர் மற்றும் அவரது குடும்பம் சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துகிறோம்’’ என்றார்.

    இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றாலும், பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நன்மையாக அமையவில்லை. கிரிக்கெட் உலகில் கொடிகட்ட பறக்கும் பிசிசிஐ-யின் நிதி பங்கீட்டில் தொகையை குறைப்பதில் முக்கிய நபராக விளங்கினார். இதனால் பிசிசிஐ அவர் மீது அதிருப்பதியில் இருந்து வந்தது.

    தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து முன்னதாகவே முடிவை அறிவிக்காமல் ஐபிஎல் தொடருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் தாமதப்படுத்துவதாக பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×