என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்ய வீரர் கச்சனோவுடன் மோதினார்.
    இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

    இதேபோல், மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மால்டோவாவின் ராது அல்போட்டுடன் மோதினார். இதில் ஸ்வெரேவ் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
    பார்ல்:

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் இறங்கினர்.

    ஆரம்பத்தில் இருந்தே இந்த ஜோடி அடித்து ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கே.எல்.ராகுல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ரன் ரேட்டும் உயர்ந்தது.

    மூன்றாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 55 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 71 பந்தில் 2 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

    ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 44 ரன்னுடனும், அஷ்வின் 25 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
    பார்ல்:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களம் இறங்குகிறது.

    ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை வெல்வதிலும் தீவிரம் காட்டுகிறது. முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனினும் தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், ஷர்துல் தாக்குர் அல்லது ஜெயந்த் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், மார்க்ராம், பவுமா (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், ஷம்சி, மார்கோ ஜான்சென், லுங்கி இங்கிடி. 
    இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது, அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
    துபாய்:

    2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.  மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ந் தேதி தொடங்கி நவம்பர் 13ந்தேதிவரை இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. 

    அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும்.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.  

    2022 டி20 உலகக் கோப்பை

    போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. 

    அதேசமயம் நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை முதன்மைச் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றுகளில் விளையாடுகின்றன.  இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.  இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.
    ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணியில் இந்தியாவின் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    துபாய்:

    2021 ஆண்டின் ஐசிசி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

    ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

    டெஸ்ட் அணி வீரர்கள்: ரோகித் சர்மா, கருணரத்னே, லாபஸ்சேங், ஜோ ரூட், வில்லியம்சன் (கேப்டன்), பாவத் ஆலம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜேமிசன், ஹசன் அலி, ஷாகின் அபிரிடி.

    ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணி

    இபோல் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணியில் இந்தியாவின் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.
    சையத் மோடி பேட்மிண்டன், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிதுன் மஞ்சுநாத் காலிறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் செர்கியுடன் மோதுகிறார்.
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரணடு முறை பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து மற்றும் பிரனோய் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து அமெரிக்காவின் லாரன் லாமை 21-16 21-13 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், சக வீரர் பிரியன்ஷு ரஜாவத்தை 21-11 16-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். 

    காலிறுதியில் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவை எதிர்கொள்கிறார். பிரனோய், காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லேவுடன் மோத உள்ளார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப்-மாளவிகா பன்சோட் ஆகியோர் விளையாடுகின்றனர். இதேபோல் சமியா இமாத் பரூக்கி, அனுபமா உபாத்யாயா ஆகியோரும் காலிறுதியில் மோதுகின்றனர். 

    ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொருத்தவரை மிதுன் மஞ்சுநாத்தும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் இனி ரஷிய வீரர் செர்கியுடன் மோதுகிறார். இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அர்ஜுன்-துருவ் கபிலா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது.
    துபாய்:

    டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 117 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. 116 புள்ளிகளுடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 101 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. 

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருந்தது. அதன்பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனால் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு சென்றது. தென் ஆப்பிரிக்க அணி 99 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்திய அணி தோல்வியடைந்த அதேவேளையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடி 4-0 என ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 

    பாகிஸ்தான் அணி ஒரு இடம் சரிந்து, 6வது இடத்திலும், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்சதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
    இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே.எல். ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    பார்ல்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    பார்ல் நகரில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது.

    கேப்டன் பவுமா, டூசன் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பவுமா 110 ரன்னும், டூசன் 96 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 129 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷிகர்தவான் 79 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும், ‌ஷர்துல் தாகூர் 43 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். நிகிடி, ‌ஷம்சி, பெகுல்வாயோ தலா 2 விக்கெட்டும், கேசவ் மகாராஜ், மார்க்ராம் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த தோல்வியால் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவானும், விராட் கோலியும் நன்றாக பேட்டிங் செய்தனர். 20 முதல் 25 ஓவர்கள் வரை இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

    மிடில் ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து விட்டோம். மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது. மிடில் ஓவர்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

    மிடில் ஓவரில் ஒரு ஜோடியாவது நிலைத்து ஆடியிருக்க வேண்டும்.நாங்கள் எக்ஸ்ட்ரா மூலம் கிட்டத்தட்ட 20 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம். இது அதிகமானதே. நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். வீரர்கள் அதிலிருந்து பாடம் கற்று இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை நடக்கிறது.

    விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
    பார்ல்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததுடன், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

    இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

    சரியாக விளையாடாமல் சொதப்பி வந்த கோலி, தற்போது படிப்படியாக பார்முக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பட்டியலில் எம் எஸ் டோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

    மெல்போர்ன் அணியின் மேக்ஸ்வெல் 154 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். பிக்பாஷ் லீக் தொடரில் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
    டிரினிடாட்:

    பிக்பாஷ் லீக் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் மெல்போர்ன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

    ஜோ கிளார்க் 35 ரன்னிலும், நிக் லார்கின் 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார்.

    இறுதியில், மெல்போர்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது. இது பிக் பாஷ் லீக்கில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 4 சிக்சர், 22 பவுண்டரி உள்பட 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பிக் பாஷ் லீக் தொடரின் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேக்ஸ்வெல் 41 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இரண்டாவது அதிவேக சதமாகும்.

    அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டாய்னிஸ் 31 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹோபர்ட் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மெல்போர்ன் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    154 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றாலும் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோற்ற ஹோபர்ட் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 164 ரன்களை சேர்த்தது.
    டிரினிடாட்:

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    ஹர்னூர் சிங் 88 ரன்னும், ரகுவன்ஷி 79 ரன்னும், ராஜ் பாவா 42 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜ்வர்தன் 17 பந்தில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    இறுதியில், அயர்லாந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்காட் மெக்பத் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா 174 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. 

    இந்தியா சார்பில் சங்வான், அனீஷ்வர் கவுதம், கவுஷல் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 7 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 40 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37 - 30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 35 - 34 என திரில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
    ×