search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    154 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல்
    X
    154 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல்

    ரன் மெஷினான மேக்ஸ்வெல் - பிக்பாஷ் லீகில் சாதனை படைத்த மெல்போர்ன் ஸ்டார்ஸ்

    மெல்போர்ன் அணியின் மேக்ஸ்வெல் 154 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். பிக்பாஷ் லீக் தொடரில் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
    டிரினிடாட்:

    பிக்பாஷ் லீக் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் மெல்போர்ன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

    ஜோ கிளார்க் 35 ரன்னிலும், நிக் லார்கின் 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார்.

    இறுதியில், மெல்போர்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது. இது பிக் பாஷ் லீக்கில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 4 சிக்சர், 22 பவுண்டரி உள்பட 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பிக் பாஷ் லீக் தொடரின் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேக்ஸ்வெல் 41 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இரண்டாவது அதிவேக சதமாகும்.

    அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டாய்னிஸ் 31 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹோபர்ட் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மெல்போர்ன் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    154 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றாலும் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோற்ற ஹோபர்ட் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×