என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர்.

    புதுடெல்லி:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் சேர்த்தனர்.

    இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ரன்களில் வெளியேறினார். குயின்டன் டி காக் 22 ரன்களே சேர்த்தார்.

    அதன்பின்னர் வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச வந்தார். அவர் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் வான் டெர் டுஷன். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
    • இந்திய அணியின் துவக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 76 ரன்கள் விளாசினார்.

    புதுடெல்லி:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷன், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 76 ரன்கள் விளாசினார். இவரது ஸ்கோரில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள் சேர்த்தார்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    • செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது.
    • செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

    இந்நிலையில், சென்னை, ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்ட்டவுனையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

    • இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுகிறார்கள்.
    • தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் களமிறங்கவில்லை

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர். இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுகிறார்கள்.

    இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

    இந்திய அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாகல், அவேஷ் கான்.

    தென் ஆப்பிரிக்க அணி: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், ரிடிஸ்டன் ஸ்டப்ஸ், வாய்னே பார்னெல், டிவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகராஜ், டப்ரைஸ் ஷம்சி, ரபாடா, நோர்ட்ஜே.

    • 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது.

    இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
    • இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 4932 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.

    இதைத்தவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார். இந்த சாதனையை பாபர் அசாம் 13 போட்டிகளில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

    இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    23 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மிளிரச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா கால கட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவனுடன் இணைந்து புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
    • பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இருப்பது மிக சிறந்த ஒன்றாகும்.

    புதுடெல்லி:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, முகமது ஷமி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஏற்கனவே ஓய்வு கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கேப்டன் பொறுப்பை வகித்த லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் பதவி நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. மிகவும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் பதவி வகிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    சொந்த ஊரில் தலைமை தாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது சிறந்த உணர்வாகும். ஐ.பி.எல். போட்டி மூலம் பல தவறுகளில் இருந்து கற்று கொண்டேன். வரும் நாட்களில் எனக்கு அது உதவும் என்று கருதுகிறேன்.

    கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனது கிரிக்கெட் ஏற்றம், இறக்கத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை சிறப்பாக்குவேன். ராகுல் தொடக்க வீரராக ஆடி இருந்ததால் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம் இருக்காது. எங்களிடம் அதிகமான தொடக்க வீரர்கள் இல்லை. ஒரு அணியாக நாங்கள் அடைய விரும்பும் இலக்கை பற்றி ஆலோசித்துள்ளோம்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இருப்பது மிக சிறந்த ஒன்றாகும். 19 வயதுக்குட்பட்ட அணியில் ஆடிய போது அவருடன் பணியாற்றி உள்ளேன். பின்னர் இந்திய அணியில் பணிபுரிகிறேன்.

    நிறைய அனுபவம் வாய்ந்த அவர் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ஆவார். அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். இன்னும் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வென்ற அணி என்ற உலக சாதனையை படைக்கும்.

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

    • ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணி 773 குவித்து டிக்ளேர் செய்தது.
    • பெங்கால் அணி சார்பில் அந்த அணியில் 9 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.

    பெங்களூரு:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்திருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்கள் எடுத்தனர். இதேபோல், சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் சதமடித்தார்.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஷமார் புருக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 70 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். மொகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கையின் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கொழும்பு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அசலங்கா 39 ரன்னும், குசால் மெண்டிஸ் 36 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 24 ரன்னும், டேவிட் வார்னர் 21 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    ×