என் மலர்

  கிரிக்கெட்

  முதல் டி20 கிரிக்கெட்: இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
  • வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர்.

  புதுடெல்லி:

  இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் சேர்த்தனர்.

  இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ரன்களில் வெளியேறினார். குயின்டன் டி காக் 22 ரன்களே சேர்த்தார்.

  அதன்பின்னர் வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச வந்தார். அவர் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் வான் டெர் டுஷன். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Next Story
  ×