search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
    X

    விராட் கோலியுடன் பாபர் அசாம்

    விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

    • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
    • இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 4932 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.

    இதைத்தவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார். இந்த சாதனையை பாபர் அசாம் 13 போட்டிகளில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

    இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×