என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா அணி 133 ரன்னில் சுருண்டது.
- அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்திய மகளிர் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தியாவின் அருந்ததி ரெட்டியின் (4 விக்கெடெ்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்னில் சுருண்டனர். 18 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ஸ்ரீ சரணி மற்றும் ரேனுகா சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.
நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 16 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4 விக்கெட் வீழ்த்திய அருந்ததி ரெட்டி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.
- 153 பந்தில் சதம் அடித்து, 141 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- 2-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சேர்ந்து 278 ரன்கள் குவித்தார்.
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கர்நாடகா அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.
கே.எல். ராகுல் 153 பந்தில் சதம் அடித்தார். தேவ்தத் படிக்கல் 144 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்- தேவ்தத் படிக்கல் ஜோடி 278 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்திருந்தது.
- ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும்.
- வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.
உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) உள்ளது.
ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாயின் பெரும் பங்கு பி.சி.சி.ஐ. மூலமே கிடைக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் வணிக மதிப்பு ரூ.1800 கோடி முதல் ரூ.2200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல் 2027 வரையிலான கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. தோராயமாக ரூ.2079 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கிறது.
ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும். அதாவது அவர்கள் ரூ.310 கோடி சம்பாதிக்கிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில்தான் அதிக அளவில் வருவாய் குவிகிறது. வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் 68 ரன்கள் விளாசினார்.
- விலெம் மைபர்க், கெர்ஹட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் நமீபியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அமெரிக்க அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் மொனக் படேல் மற்றும் ஷயன் ஜஹாங்கிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய மொனக் அரைசதம் கடந்தார். இவர் 30 பந்துகளில் 52 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) அடித்து அவுட் ஆக, ஷயன் 18 பந்துகளில் 22 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய்தேஜா 17 ரன்கள் (2 பவுண்டரிகள்) அடித்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிலிந்த் குமார் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
போட்டி முடிவில் அமெரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களை குவித்துள்ளது. அமெரிக்கா சார்பில் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் 33 பந்துகளில் 68 ரன்கள் (4 பவுண்டரிகள், 6சிக்சர்கள் ) விளாசினார். நமீபியா சார்பில் விலெம் மைபர்க், கெர்ஹட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- பெர்குசன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
- முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகே இருக்க முடிவு செய்து நாடு திரும்புகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இடம் பிடித்துள்ளார். இவர் இன்று சொந்த நாடு திரும்புகிறார் என்ற அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பெர்குசனின் மனைவி எம்மா (Emma) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம். தனது முதல் குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க பெர்குசன் விரும்புகிறார். இதனால் அவர் சொந்த நாடு திரும்புகிறார் என தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை நியூசிலாந்து வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
வருகிற 17-ந்தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அப்போது பெர்குசன் அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான பெர்குசன் 3 போட்டிகளில் 108 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. எனினும், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
133 எனும் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வெஸ்ட் இண்டஸ் அணியின் துவக்க வீரர் பிரான்டன் கிங் 22 ரன்களுக்கு (4 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), ஷிம்ரன் ஹெட்மையர் 32 பந்துகளில் 46 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேபாளம் சார்பில் நந்தன் யாதவ் மட்டும் 1 விக்கெட் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் ெவற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
- பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
- இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
கொழும்புவில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் வீரர்கள், இந்திய அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள அரசியல் பிரச்சனைகள் காரணமாக கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தனர். இந்த விவகாரத்திற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணி வீரர்கள் கை குலுக்குவார்களா என்ற கேள்விக்கு இதுவரை கேள்விக்குறி மட்டுமே பதிலாக உள்ளது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியின் போது கை குலுக்குவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், "இந்த 'கை குலுக்கக் கூடாது' என்பது இந்தியா தொடங்கிய ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயம். இது நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு தகுதியற்றது. விளையாட்டின் உணர்விற்குள் சரியாக விளையாடுங்கள் அல்லது விளையாடவே வேண்டாம்," என குறிப்பிட்டுள்ளார்.
- தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குஷல் (1), ஆசிஃப் (11) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் பௌடெல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவருடன் விளையாடிய தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 47 பந்துகளில் 58 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) அடித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து ஆடியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் களமிறங்கிய குல்சன் (11) மற்றும் சோம்பல் கமி 15 பந்துகளில் 26 ரன்கள் (4 பவுண்டரிகள்) அடித்தார். இதனால் நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம்.
- அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "போட்டி அதிக அழுத்தமாக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அதிக அழுத்தம் இல்லை. போட்டியின் தரம் நன்றாக இருக்க வேண்டும். இன்று அது நடக்கும் என்று நம்புகிறேன். இந்தியா ஒரு நல்ல அணி, மிகவும் சக்திவாய்ந்த அணி, இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம். இன்று மட்டுமல்ல, முழு உலகக் கோப்பையிலும்."
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில்லை என்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின் முந்தைய முடிவு குறித்து, "அது ஒரு தவறான முடிவு. கிரிக்கெட் விளையாட வேண்டும், உலகக் கோப்பையை எப்படித் தவறவிட முடியும்? அவர்கள் விளையாடியது நல்லது. புள்ளிகளை இழப்பது சரியல்ல என்பதால் அது அவர்களுக்கும் நல்லது" என்றார்.
"இரு அணிகளும் சமநிலையில் உள்ளன, ஆனால் இந்தியா மிகவும் வலுவான அணி. இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார், அது இந்தியாவுக்கு மிகவும் நல்ல செய்தி," என்று அவர் தெரிவித்துள்ளார்.
- சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் கால்இறுதியில் தோற்றார்.
2-வது ஸ்டார் கன்டென்டர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிசென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- யஷஸ்வினி கோர்படே ஜோடி 3-0 (11-9, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஹர்மீத் தேசாய்-யஷஸ்வினி கோர்படே ஜோடி இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் எட்வர்ட் ஐயோனெஸ்கு-பெர்னாடெட் ஸாக்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் கால்இறுதியில் தோற்றார். அவர் செக்குடியரசை சேர்ந்த லுபோமிர்ரிடம் 6-11, 8-11, 11-13 என்ற செட் கணக்கில் தோற்றார்.
- அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும்.
- கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்
20 நாடுகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
ஏ பிரிவில் உள்ள இரு அணிகளும் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இதே உத்வேகத்துடன் பாகிஸ்தானையும் தோற்கடிக்கும் வேட்கையில் சூர்யகுமார் யாதவ் அணி இருக்கிறது.
அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடத்தில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 வேகப்பந்து வீரர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அதே கலவையுடன் இன்றைய ஆட்டத்தில் அணியின் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேலுடன் குல்தீப் யாதவும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் உஸ்மான் தாரிக் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பாகிஸ்தான் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மழையால் ஆட்டம் கை விடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.






