என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நாடு திரும்புகிறார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன்
    X

    நாடு திரும்புகிறார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன்

    • பெர்குசன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகே இருக்க முடிவு செய்து நாடு திரும்புகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இடம் பிடித்துள்ளார். இவர் இன்று சொந்த நாடு திரும்புகிறார் என்ற அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    பெர்குசனின் மனைவி எம்மா (Emma) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம். தனது முதல் குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க பெர்குசன் விரும்புகிறார். இதனால் அவர் சொந்த நாடு திரும்புகிறார் என தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை நியூசிலாந்து வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    வருகிற 17-ந்தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அப்போது பெர்குசன் அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    34 வயதான பெர்குசன் 3 போட்டிகளில் 108 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×