என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஷாஹீன் அப்ரிடி 2 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
    • உஸ்மான் தாரீக் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் இந்தியா 127 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஓவரில் சயீம் ஆயுப் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16-வது ஓவரை நவாஸ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 17-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரி் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்தியா 17 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.

    18-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு தலா ஒரு பவுண்டரி, சிக்சர் கிடைத்தது. இதனால் இந்தியா 154 ரன்கள் எடுத்தது.

    19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    • அபிஷேக் சர்மா டக்அவுட் ஆனார்.
    • இஷான் கிஷன் 77 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    • இஷான் கிஷன் ஸ்கோரில் 10 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
    • இஷான் கிஷன் அவுட்டாகும்போது இந்தியா 8.4 ஓவரில் 88 ரன்கள் குவித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    7-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது. 8-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த இஷான் கிஷன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் இந்தியாவுக்கு இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இந்தியா 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தயிா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
    • பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இன்று மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் முடிவிற்கு பிறகு, இரு நாட்டு கேப்டன்களும் பரஸ்பரமாக கை குலுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்தியா- பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

    • இந்தியா பவர் பிளேயில் 52 ரன்கள் எடுத்தது.
    • 7-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    • அபிஷேக் சர்மா 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
    • இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்களுடனும், திலக் வர்மா 7 பந்தில் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

    • இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல்

    டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அர்ஷ்தீச் சிங், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை சென்று ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
    • நியூசிலாந்து அணிக்கும் எதிராகவும் தோல்வியடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை.

    டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி "டி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    பொதுவாக 3 போட்டிகள் முடிந்த பின்னர்தான் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா? இல்லையா? என்பது தெரியவரும். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்தையும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் எதிர்கொண்டது.

    4 நாட்களில் அடுத்த இரண்டு பெரிய அணிகளை சந்தித்து தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை போட்டி சென்ற பின்னர் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அதிர்ஷ்டம் இல்லாதது என்று அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:-

    பெரிய தவறுகள் எதுவும் நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நாங்க சிறந்த கிரிக்கெட் விளையாடினோம். கொஞ்சம் துரதிருஷ்டம் இருந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்க வெற்றிக்கு ரொம்ப நெருக்கமா இருந்தோம். 2 சூப்பர் ஓவரில் விளையாடினோம். இது நாங்க ரொம்ப முயற்சி பண்ணோம்னு காட்டுதுன்னு நினைக்கிறேன்.

    நீங்க எல்லா ஆட்டங்களையும் ஒருதலைப்பட்சமா பார்த்திருப்பீங்க. ஒரு அணியாக, ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அதுதான் நடக்கும்னு நான் நினைக்கிறேன்.

    தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் அதிக டி20 போட்டிகளில் விளையாடியிருந்தால், இந்த அணி எங்களை எங்கு வெல்ல முடியும், எங்கு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது பற்றிய ஒரு யோசனை எங்களுக்கு இருந்திருக்கும். நீங்கள் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறை விளையாடினால், அதுவும் உலகக் கோப்பை போட்டியில். தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லாதது அகும்.

    நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளில் விளையாடினால், எங்களுக்கு நடந்தது போல உங்கள் உலகக் கோப்பையும் நான்கு நாட்களில் முடிவடையும். நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் தோற்றோம்; நாங்கள் பெரும்பாலும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டோம். எனவே, இந்த அழுத்தம் வேறுபட்டது. நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறிய தவறு செய்தால், நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிடுவீர்கள்.

    நீங்கள் அவர்களுடன் விளையாடினால், உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும். நீங்கள் விளையாடவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய திட்டமிடலுடன் வருவார்கள்.. நியூசிலாந்தில் நாம் பார்த்தது போல, அவர்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் வந்தார்கள்... நாம் அவர்களுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ, அவ்வளவு சிறப்பாக செயல்படுவோம் என்று நினைக்கிறேன், உலகக் கோப்பையில் மட்டுமல்ல, இருதரப்பு தொடரிலும்.

    நீங்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால் உலகக் கோப்பை வெற்றி ஒரு பெரிய விஷயம்.

    இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.

    • லௌரென் 39 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார்.
    • அமெரிக்கா அணியின் ஷேட்லி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் நமீபியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த அமெரிக்க அணி20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. அமெரிக்கா சார்பில் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் 33 பந்துகளில் 68 ரன்கள் (4 பவுண்டரிகள், 6சிக்சர்கள் ) விளாசினார். நமீபியா சார்பில் விலெம் மைபர்க், கெர்ஹட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    கடின இலக்கை துரத்திய நமீபியா அணிக்கு தொடக்க வீரர்களான லௌரென் மற்றும் ஜான் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஜான் 15 பந்துகளில் 19 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்த அவுட் ஆன நிலையில், லௌரென் 39 பந்துகளில் 58 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து களமிறங்கிய நிகோல் லாஃப்டி ஈடன் 17 பந்துகளில் 28 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார்.

    நல்ல துவக்கம் கிடைத்த போதிலும் இடையில் நமீபியா வீரர்கள் ரன் குவிப்பில் தடுமாறியது. அமெரிக்கா அணியின் ஷேட்லி 2 விக்கெட்டுகளையும், சௌரப் நெட்ராவல்கர், அலி கான் மற்றும் ஷூபம் ரஞ்சேன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். மற்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர்.

    இதனால் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அமெரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • ஆஸ்திரேலியா அணி 133 ரன்னில் சுருண்டது.
    • அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்திய மகளிர் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தியாவின் அருந்ததி ரெட்டியின் (4 விக்கெடெ்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்னில் சுருண்டனர். 18 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ஸ்ரீ சரணி மற்றும் ரேனுகா சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.

    நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 16 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    4 விக்கெட் வீழ்த்திய அருந்ததி ரெட்டி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

    • 153 பந்தில் சதம் அடித்து, 141 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • 2-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சேர்ந்து 278 ரன்கள் குவித்தார்.

    ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கர்நாடகா அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.

    கே.எல். ராகுல் 153 பந்தில் சதம் அடித்தார். தேவ்தத் படிக்கல் 144 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்- தேவ்தத் படிக்கல் ஜோடி 278 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 2 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்திருந்தது.

    ×