என் மலர்
விளையாட்டு
- முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ராஞ்சி:
16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.
அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
- மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்னர், ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் டெம்பா பவுமா 16, குயின்டன் டி காக் 20, ராசி வான் டெர் டுசன் 4, ஹென்ரிச் கிளாசென் 28 ரன், மார்கோ ஜான்சன் 9 ரன், டேவிட் மில்லர் 43 ரன், ஜெரால்ட் கோட்ஸி 22 ரன், ககிசோ ரபாடா 9 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதானல் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
- நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்னர், ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.
- ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார்.
- இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்.
புதுடெல்லி:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலியை விட கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார். குறிப்பாக பேட்டிங்கில் அழகாக விளையாடும் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிதானமாக இருக்கிறார். இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார். ஏனெனில் அது தான் போட்டியின் மகத்தான தன்மையாகும்.
விராட் சற்று ஆக்ரோஷத்துடன் இருப்பவர். இருப்பினும் அதேபோன்ற குணம் கொண்ட ஒருவர் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளிப்பதை சற்று கடினமாக கருதலாம். ஆனால் ரோகித் சர்மா அதில் நன்றாக இருக்கிறார். குறிப்பாக நல்ல மனிதராகவும் சிறந்த வீரராகவும் அவர் நீண்ட காலமாக இந்தியாவுக்கு செயல்பட்டு வருகிறார். தற்சமயத்தில் அவர் இந்தியாவின் கேப்டனாக சிறந்த வேலையை செய்து வருகிறார்" என்று கூறினார்.
- முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.
- 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலியும் 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஷர்துல் தாகூரும் தட்டிச் சென்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து அந்த போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் போது அனைத்து வீரர்களும் கலாய்த்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ரியாக்ஷன் வேர லெவலில் இருந்தது.
கேஎல் ராகுல் பீல்டராக சிறப்பாக செயல்பட்டாலும் கீப்பிங் என்று வரும் போது அவர் சுமாராகவே செயல்படுவார். அதனால் கூட அனைவரும் கலாய்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடப்பு தொடரில் நியூசிலாந்து தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
- இரு அணிகளும் மோதிக்கொள்வது இது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.
சென்னை:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.
இதில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஐ.சி.சி. உலகக் கோப்பையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு 5 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
கடந்த 8-ந் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 13-ந் தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தன. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறுவது 3-வது போட்டியாகும்.
நியூசிலாந்து தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெதர்லாந்தை 99 ரன் வித்தியாசத்திலும் , 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தி இருந்தது.
நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் நாளையும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் எஞ்சிய 3 ஆட்டத்தில் விளையாடமாட்டார். டாம் லாதம் நாளைய போட்டிக்கு கேப்டனாக பணியாற்றுவார்.
பேட்டிங்கில் கான்வே (229 ரன்), ரச்சின் ரவீந்திரா (183), மிச்சேல் (137) ஆகியோ ரும், பந்துவீச்சில் சான்ட் னெர், மேட் ஹென்றியும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் தலா 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அதே போல நியூசிலாந்து அணிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டி யில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது. 3-வது போட்டியில் தான் இங்கிலாந்தை வென்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ரகுமானுல்லா குர்பாஸ் (148 ரன்), கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி (112), அஸ்மத்துல்லா ஓமாராசி (103 ரன்), ஆகியோரும் பந்துவீச்சில் ரஷீத்கான் (5 விக்கெட்), முஜிபுர் ரகுமான் (3 விக்கெட்) ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிக்கொள்வது இது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.
2015 உலக கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2019 உலக கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
- தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
- மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தர்மசாலா:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-
தென்ஆப்பிரிக்கா:
குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ககிசோ ரபடா, கேஷவ் மஜராஜ், இங்கிடி, ஜெரால்டு கோட்ஜி.
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைபிரான்ட் இங்கில்பிரிட், வான்டெர் மெர்வ், லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக முஜீப் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
- இங்கிலாந்தை வென்ற பிறகு முஜீப் ரஹ்மானை ஒரு சிறுவன் கட்டியணைத்து அழுதான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக முஜீப் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டி முடிந்த பிறகு முஜீப் ரஹ்மானை ஒரு சிறுவன் கட்டியணைத்து அழுதான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த சிறுவன் ஆப்கான் சிறுவன் அல்ல இந்திய சிறுவன் என முஜீப் ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றபோது என்னை கட்டியணைத்தது ஒரு ஆப்கானிய சிறுவன் அல்ல, ஒரு இந்தியன். எங்களின் வெற்றிக்காக அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு உணர்வு. நீங்கள் அளித்த அன்பிற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
- இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தர்மசாலா:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடபடும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் எனவும் முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
- தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
- அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது சகோதரியின் மறைவு செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தனது பயண திட்டத்தை கூட நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் தனது சகோதரி பரிதாபமாக இறந்தார் என்ற செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். மேலும் தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.
- இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை கூறிள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.
ஏனெனில் ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது தலைமை பண்புகளை நான் டோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் டோனி ரோகித்தான்.
ஏனெனில் ரோகித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த டோனி என்பதை நினைக்க வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும்.
லக்னோ:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று அரங்கேறிய 14-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற இலங்கை பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி கடைசி 44 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும். தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்று இருந்தது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். இலங்கை அணி இனி எஞ்சிய 6 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும்.
ஆஸ்திரேலியா சாதனை- இலங்கை வேதனை
* உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையின் 42-வது தோல்வி (83 ஆட்டத்தில்) இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக தோல்விகளை சந்தித்த மோசமான அணிகளின் சாதனை பட்டியலில் ஜிம்பாப்வேயை (42 தோல்வி) சமன் செய்துள்ளது.
* உலகக் கோப்பையில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற இலங்கையின் சோகம் தொடருகிறது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 9-வது வெற்றி இதுவாகும். உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணியாக ஆஸ்திரேலியா வலம் வருகிறது.






