என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆப்கன் சிறுவன் அல்ல.. கட்டியணைத்த ரசிகர் குறித்து முஜீப் ரஹ்மான் உருக்கம்
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக முஜீப் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
- இங்கிலாந்தை வென்ற பிறகு முஜீப் ரஹ்மானை ஒரு சிறுவன் கட்டியணைத்து அழுதான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக முஜீப் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டி முடிந்த பிறகு முஜீப் ரஹ்மானை ஒரு சிறுவன் கட்டியணைத்து அழுதான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த சிறுவன் ஆப்கான் சிறுவன் அல்ல இந்திய சிறுவன் என முஜீப் ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றபோது என்னை கட்டியணைத்தது ஒரு ஆப்கானிய சிறுவன் அல்ல, ஒரு இந்தியன். எங்களின் வெற்றிக்காக அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு உணர்வு. நீங்கள் அளித்த அன்பிற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.






