என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
    • வங்க தேச போட்டியில் எளிதாக இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

    மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நாளை மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:

    இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை நாளைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் 'டேட்டிங்' செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த "அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்" என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    நாளை நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.



    • நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    இந்த நிலையில் கேப்டன் லாதம் மற்றும் பிலிப்ஸ் ஜோசி நங்கூரம் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லாதம் 68 ரன்னிலும் பிலிப்ஸ் 71 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (வயது 31) பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.

    காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. நெய்மர் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    "அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்" என்றும் கேப்டன் கேசேமிரோ கூறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல்கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் மெஸ்சி அடித்தார். வெனிசுலா அணி சிலி அணியை 3-0 என்ற கோல்கணக்கிலும், பராகுவே அணி பொலிவியா அணியை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றன. ஈக்வடார்- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.

    இதற்கிடையே ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில், சவுதி அரேபிய கிளப் அணியான அல் ஹிலால் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், அடுத்து நவம்பர் 6-ம் தேதி மும்பை சிட்டி எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான். இப்போட்டி நவி மும்பையில் நடைபெற உள்ளது. நெய்மர் காயமடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    • வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
    • 2007 உலகக் கோப்பையில் அந்த அணியிடம் தோற்று லீக் சுற்றில் இந்தியா வெளியேறி இருந்தது.

    புனே:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 3 ஆட்டத்தில் விளையாடி விட்டன. இன்று முதல் 4-வது போட்டியில் ஆடுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    இந்திய அணி 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் நாளை (வியாழக்கிழமை) மோதுகிறது. புனேவில் பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் கடைசியாக ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் கடந்த 15-ந் தேதி மோதின. இதில் வங்காளதேசம் 6 ரன்னில் வெற்றி பெற்றது. கடைசி 5 போட்டி தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இதனால் வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். 2007 உலகக் கோப்பையில் அந்த அணியிடம் தோற்று லீக் சுற்றில் வெளியேறி இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானுடனும், தென்ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துடனும் அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது.

    கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் சதம், அரைசதத்துடன் 217 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல விராட் கோலி (156), லோகேஷ் ராகுல் (116) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    பந்து வீச்சில் பும்ரா 8 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் (தலா 5 விக்கெட்), முகமது சிராஜ் (3 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேசம் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்திடம் 137 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது.

    வங்காளதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. ஆனால் அதே சமயத்தில் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை.

    • தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலகக் கோப்பையில் நெதர்லாந்து வெற்றியை பதிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 245 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

    அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து சாதனை படைத்தது. அத்துடன் 2007-க்குப்பின் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து அசத்தியது.

    இந்த சரித்திர வெற்றிக்கு 78* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    7வது இடத்தில் களமிறங்கிய அவர் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் குவித்து வெற்றி பெற உதவினார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 7-வது இடத்தில் களமிறங்கிய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

    இதற்கு முன் 36 வருடங்களுக்கு முன் நடைபெற்ற 1987 உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 7-வது இடத்தில் களமிறங்கி 72* (58) ரன்கள் அடித்து அந்த சாதனையைப் படைத்து இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

    அந்தப் பட்டியல்:

    1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

    2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

    3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

    4. தசுன் சனாக்கா : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

    • சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், சென்னையில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

    ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் திடீரென எழுச்சி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

    இதேபோல் நியூசிலாந்து அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

    ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    • அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. 

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    37-வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 49 விளையாட்டுகள் நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 116 அதிகாரிகளுடன் இந்த குழு பங்கேற்கிறது.

    அதிகபட்சமாக தடகளத்தில் இருந்து 80 பேரும், கால்பந்து, கூடைபந்து போட்டியில் தலா 40 பேரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பினர்.

    • பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது.
    • பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    பெங்களூரு:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் தற்போது அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    • முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ராஞ்சி:

    16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.

    அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
    • மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    பின்னர், ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் டெம்பா பவுமா 16, குயின்டன் டி காக் 20, ராசி வான் டெர் டுசன் 4, ஹென்ரிச் கிளாசென் 28 ரன், மார்கோ ஜான்சன் 9 ரன், டேவிட் மில்லர் 43 ரன், ஜெரால்ட் கோட்ஸி 22 ரன், ககிசோ ரபாடா 9 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதானல் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    ×