search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvsAFG"

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×