என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த நிலையில் கேப்டன் லாதம் மற்றும் பிலிப்ஸ் ஜோசி நங்கூரம் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லாதம் 68 ரன்னிலும் பிலிப்ஸ் 71 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.






