என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு தேர்வு
- சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்றுள்ளது.
சென்னை:
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், சென்னையில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் திடீரென எழுச்சி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
இதேபோல் நியூசிலாந்து அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.






