என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.
    • இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை கூறிள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    ஏனெனில் ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது தலைமை பண்புகளை நான் டோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் டோனி ரோகித்தான்.

    ஏனெனில் ரோகித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த டோனி என்பதை நினைக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும்.

    லக்னோ:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று அரங்கேறிய 14-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற இலங்கை பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி கடைசி 44 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றி இதுவாகும். தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்று இருந்தது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். இலங்கை அணி இனி எஞ்சிய 6 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும்.

    ஆஸ்திரேலியா சாதனை- இலங்கை வேதனை

    * உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையின் 42-வது தோல்வி (83 ஆட்டத்தில்) இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக தோல்விகளை சந்தித்த மோசமான அணிகளின் சாதனை பட்டியலில் ஜிம்பாப்வேயை (42 தோல்வி) சமன் செய்துள்ளது.

    * உலகக் கோப்பையில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற இலங்கையின் சோகம் தொடருகிறது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 9-வது வெற்றி இதுவாகும். உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணியாக ஆஸ்திரேலியா வலம் வருகிறது.

    • பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரை தேதி வரை நடக்கிறது.

    ஓடென்ஸ்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரையும், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இந்த இரண்டு போட்டியில் இருந்தும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் 31 வயது இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் விலகி இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் முதுகு வலியுடன் ஆடி ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரனாய் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டுவதற்கு 2-3 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் இந்த போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    • சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 6-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டுள்ளது.

    தர்மசாலா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் 102 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையையும், 134 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரமாக வலம் வருகிறது. இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311 ரன்கள் எடுத்ததுடன் அந்த அணியை 177 ரன்களில் அடக்கி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக் (2 சதம் உள்பட 209 ரன்கள்), வான்டெர் டஸன் (ஒரு சதம்), மார்க்ரம் (ஒரு சதம், ஒரு அரைசதம்) பட்டையை கிளப்பி வருகிறார்கள். பந்து வீச்சில் ககிசோ ரபடா, மார்கோ யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் அசத்துகிறார்கள்.

    நியூசிலாந்து, இந்திய அணிகளை போல் தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசிக்கும் உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது.

    ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் பணிந்தது.

    நெதர்லாந்து அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை. பேட்டிங்கில் விக்ரம்ஜித் சிங், ஸ்காட் எட்வர்ட்சும், பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், வான்டெர் மெர்வ், ஆர்யன் தத்தும், ஆல்-ரவுண்டராக பாஸ்ட் டி லீட், காலின் அகேர்மானும் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்க நெதர்லாந்து எல்லா வகையிலும் தீவிரமாக முயற்சிக்கும். இருப்பினும் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை சமாளிப்பது கடினம் தான்.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய 3 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவே வென்றுள்ளது.

    தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், தெம்பா பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ககிசோ ரபடா, கேஷவ் மஜராஜ், இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி அல்லது ஜெரால்டு கோட்ஜி.

    நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைபிரான்ட் இங்கில் பிரிட், வான்டெர் மெர்வ், லோகன் வான் பீல் அல்லது ரியான் கிளென், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு.
    • சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    வேகமாக வளர்ந்து வரும் நமது கிரிக்கெட்டை உலகின் மிகப்பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நான் விளையாட்டைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பெரேரா 78 ரன்கள் எடுத்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
    • கிளென் மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் பெரேரா களமிறங்கினர்.

    இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்து மாஸ் அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நிசங்கா 61 ரன்கள் எடுத்திருந்த போதும் பெரேரா 78 ரன்கள் எடுத்த போதும் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    துவக்க வீரரான டேவிட் வாரனர் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ச் 52 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் நிதானமாக ஆடி 40 ரன்களை குவித்தார்.

    பிறகு களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் சிறப்பாக ஆடி 58 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கிளென் மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 215 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் மேக்ஸ்வெல் 31 ரன்களுடனும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    • நிசங்கா - குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் பெரேரா களமிறங்கினர்.

    இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்து மாஸ் அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நிசங்கா 61 ரன்கள் எடுத்திருந்த போதும் பெரேரா 78 ரன்கள் எடுத்த போதும் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வந்த மெண்டீஸ் 9, சதீரா 8, தனஞ்ஜெயா 7, துனித் வெல்லலகே 2, சமிகா 2, தீக்ஷனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்த இலங்கை அணி அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

    இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • முதல் விக்கெட்டுக்கு குசல் பெரேரா மற்றும் நிசங்கா ஜோடி 125 ரன்கள் குவித்தது.
    • இலங்கை 32 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. முதல் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் விக்கெட்டுக்கு குசல் பெரேரா மற்றும் நிசங்கா ஜோடி 125 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இலங்கை 32 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. மழை நீர் மைதானத்தில் படாமல் இருக்க ஊழியர்கள் பெரிய கவரை எடுத்து வந்தனர். அப்போது அவர்களுக்கு உதவியாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அவர்களுடன் சேர்ந்து அந்த கவரை எடுக்க உதவினார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்திய திரைப்பட கதாபாத்திரத்தில் சில ஸ்டைல்களை செய்து வருவதுண்டு. முக்கியமாக புஷ்பா ஸ்டைலை அடிக்கடி செய்து காட்டுவார். வார்னர் மைதானத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இந்தியர்களின் மனதை கவர்ந்துள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



    • விராட் கோலியை உலக அரங்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு இயக்குனர் பாராட்டினார்.
    • விராட் கோலிதான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான ஒரே காரணம் என்று கூறினார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஒலிம்பிக் கமிட்டி இன்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முன்பாக அந்த கோரிக்கையை வைத்தது. அதில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு உறுப்பினர்களின் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக தற்போது ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    குறிப்பாக பேஸ்பால், லேக்க்ராஸ், கிரிக்கெட், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்ப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் 5 விளையாட்டுகளுக்கும் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஒலிம்பிக்கில் இந்த 5 விளையாட்டுகளும் சேர்க்கப்படும் என்று ஒலிம்பிக் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அந்த அறிவிப்பில் கிரிக்கெட்டை தெரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் பயன்படுத்தியுள்ளது. உலக அளவில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருந்தும் 25000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 75க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் அடையாளமாக இருப்பதால் விராட் கோலி புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

    மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை உலக அரங்கில் பாராட்டினார். விராட் கோலிதான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான ஒரே காரணம் என்று கூறினார்.

    இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலிலுக்கு நிஜ வாழ்க்கையிலும் இணையத்திலும் வெறித்தனமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவரது பிரபலத்தை சுட்டிக்காட்டிய காம்ப்ரியானி, "விராட் கோலிக்கு சமூக ஊடகங்களில் 340 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரை உலகில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். 



    • 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தே அவுட் என நடுவரிடம் முறையீடப்பட்டது. ஆனால் நடுவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து வீசிய 3-வது பந்தில் குசல் பெரேராவை ஸ்டார்க் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். இது குறித்து இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே நகர்ந்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக அளவில் மன்கட் செய்யப்படும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம் என குர்பாஸ் கூறினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம். அதிக ரன்கள் எடுப்பது போன்ற விளையாட்டின் யுக்திகள் பலவற்றை கோலி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை.

    லக்னோ:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு குமார இடம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பதிரனா முதல் போட்டியில் 95 ரன்களும் 2-வது போட்டியில் 90 ரன்களையும் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

    இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.

    ×