என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆட்டம் காட்டிய ஆடம் ஜம்பா.. 125-க்கு 1 விக்கெட்.. 209 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்
- நிசங்கா - குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் பெரேரா களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்து மாஸ் அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நிசங்கா 61 ரன்கள் எடுத்திருந்த போதும் பெரேரா 78 ரன்கள் எடுத்த போதும் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து வந்த மெண்டீஸ் 9, சதீரா 8, தனஞ்ஜெயா 7, துனித் வெல்லலகே 2, சமிகா 2, தீக்ஷனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்த இலங்கை அணி அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






