என் மலர்
விருதுநகர்
- எந்த ஒரு குழந்தையும் தனக்கு பின்னால் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் தனது சேட்டைகளை ஆரம்பிக்கின்றன.
- நீச்சல் பழக செல்லும் போதும், சறுக்கில் ஏறி விளையாடும்போதும் என பல்வேறு நிகழ்வுகளில் அப்பா, அம்மா உடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது.
விருதுநகர்:
விருதுநகர் சுலோச்சனா தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், தனியார் சிமெண்டு ஆலையில் விற்பனை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குருசரண்யா. ஆசிரியையாக வேலை பார்த்து தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11 மாதங்களே ஆன கைலன் பார்த்தசாரதி, அதியன் பார்த்தசாரதி.
இதில் அதியன் பார்த்தசாரதி எப்போதும் துருதுரு குழந்தையாக வளர்ந்து வந்துள்ளான். இதனால் கைலன் பார்த்தசாரதியை விட அதியன் பார்த்தசாரதி மீது அதிக கவனம் செலுத்தி வந்தனர். முதல் மாடியில் வசித்து வரும் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வீட்டை எப்போதும் பூட்டியே வைத்துள்ளனர்.
இதற்கிடையே மகேஸ்வரன் வேலைக்கு செல்லும் போது பின்தொடர்ந்து வேகமாக தவழ்ந்து வரும் இளைய மகன் அதியன் பார்த்தசாரதிக்கு பலகையால் தடுப்பு போட்ட பின்னரே அவர் புறப்பட்டு செல்வார். இரட்டை குழந்தைகளுக்கு 10 மாதங்கள் ஆன நிலையில் அதியன் பார்த்தசாரதி தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, வேகமாக தவழ்ந்து சென்று தடுமாறி விழுவதும் வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குழந்தை வீட்டின் 2-வது மாடிக்கு ஏற முயன்றுள்ளான். முதலில் தடுத்த பெற்றோர் அவனது தைரியத்திற்கு ஊக்கம் கொடுத்தனர். அதன் பயனாக 34 படிகளை 10 மாத குழந்தை அசாதாரணமாக 4 நிமிடங்களில் ஏறியது. இதனை வீடியோவாக பதிவு செய்த குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அத்துடன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கினர்.
ஆனால் அவர்களது முயற்சிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பலரது பெற்றோர் இது மிகவும் ஆபத்தானது. சமூக வலைதளங்களில் பார்க்கும் மற்ற குழந்தைகளும் இதற்கான முயற்களில் ஈடுபடும் போது உயிருக்கு உலை வைக்கும் நிகழ்வாக மாறிவிடும். உடனடியாக இந்த பதிவினை அழியுங்கள் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனாலும் குழந்தையின் முயற்சியை ஊக்கப்படுத்த நினைத்த பெற்றோர் நோபிள் உலக சாதனை புத்தகத்திற்கும் அனுப்பி வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தார் இந்த அரிய முயற்சியை அங்கீகரித்ததோடு, சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது. இதுபற்றி இரட்டை குழந்தைகளின் தாய் குருசரண்யா கூறுகையில், முதலில் குழந்தையின் இந்த செயல் விபரீதமாக தோன்றினாலும், அதன் தைரியத்தை என்னால் தடுக்க முடியவில்லை.
எந்த ஒரு குழந்தையும் தனக்கு பின்னால் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் தனது சேட்டைகளை ஆரம்பிக்கின்றன. நீச்சல் பழக செல்லும் போதும், சறுக்கில் ஏறி விளையாடும்போதும் என பல்வேறு நிகழ்வுகளில் அப்பா, அம்மா உடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் நாங்கள் துணிந்து இதற்கு அனுமதித்தோம்.
குழந்தையின் உந்துதலை ஒரு சாதனையாக்கி மற்ற குழந்தைகளுக்கு அதனை வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதற்கான முயற்சிகளை செய்தோம். வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளை எங்கள் குழந்தைகள் செய்வார்கள், அதற்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவே நாங்கள் இதனை பார்க்கிறோம். குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அதனை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும், இயலாததை திணிக்க கூடாது என்றார்.
- நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சி லர்கள் உள்பட 12 கவுன்சி லர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசி தழிலும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.
இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நடந்தது.
அப்போது நரிக்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கவுன்சி லர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காளீஸ்வரி சமயவேலு நரிக்குடி ஒன்றிய சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கம்யூனிஸ்டு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.
திருச்சுழி
திருச்சுழி ஒன்றியம் நரிக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் பேராணியாக சென்றனர்.
வீடற்றவர்களுக்கு வீடு கேட்டும், குடியிருப்பு மக்களுக்கு பட்டா கேட்டும், 100 நாள் வேலையை முறைப்படுத்தி வழங்கவும், கிராமப்புற மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுக்கப் பட்டது.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பாலு, தாலுகா குழு செய லாளர் பெரியசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் அயூப்கான், சி.ஐ.டி.யூ. உதவி தலைவர் சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பூங்கோதை, மாற்றுத்திற னாளி சங்க நிர்வாகி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொறுப்பு சேர்மனா? புதிய சேர்மனா? இன்று பலப்பரீட்சை நடந்தது.
- 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில் 2-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரான கலாவதி சந்திரன் மற்றும் 11 வார்டு கவுன்சிலரான பஞ்சவர்ணம் ஆகியோரை தவிர மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத் துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இந்த நிலையில் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பு நடந்தது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம் தரப்பிலும் விளக்கம் கேட்கப்பட்டது.இதனையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் இரு தரப்பினரின் விளக்கத்தையும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கு விரிவான அறிக்கையாக அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து இந்த அறிக்கையினை பரிசீலனை செய்த ஊரக வளர்ச்சித் துறை செயலர் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பின் படி நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.மேலும் இந்த நடவடிக்கையானது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறாமல் நரிக்குடி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.
இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் பகுதிக்கு மேல் அதாவது 8 கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் மட்டுமே சேர்மன் தேர்தல் நடைபெறு மென கூறப்படும் நிலை யிலும் தற்போது நரிக்குடி ஒன்றிய பொறுப்பு சேர்ம னாக அ.தி.மு.க.வை சேர்ந்த அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பதவி வகித்து வரும் சூழ்நிலையிலும் அ.தி.மு.க. தரப்பில் 8 கவுன்சிலர்களும், திமுக தரப்பில் 6 கவுன்சிலர்களும் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நம்பிக்கை யில்லா மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உட்பட 12 கவுன்சிலர்களும் அப்போ தைய சேர்மன் அ.தி.மு.க. சேர்மனாக இருந்த பஞ்சவர்ணத்திற்கு எதிராக வாக்களித்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி ஆதி திராவிடர் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள ஒன்றிய சேர்மன் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் 8 கவுன்சிலர்கள் இருந்தால் சேர்மன் தேர்தல் நடை பெறும் என்ற சூழ்நிலையில் தற்போது தி.மு.க. தரப்பில் 6 கவுன்சிலர்கள் ஆதரவாக இருந்து வரும் நிலையில் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க. கவுன் சிலர்களும் நடைபெறவுள்ள சேர்மன் தேர்தலில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சேர்மன் தேர்தல் நடைபெற 8 பேர் வேண்டுமென்ற விதி நிறை வேறியுள்ளதாக கருதப்படு கிறது.
ஆனால் தேர்தல் நாளான இன்று நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிவரை யாரும் வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. பொறுப்பு சேர்மன் தொடர் வாரா? அல்லது சேர்மன் தேர்தல் நடை பெற்று தி.மு.க. தரப்பில் புதிய சேர்மன் பொறுப் பேற் பாரா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்குலையாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 100- க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியத்தை கலெக்டர் வழங்கினார்.
- சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர் களை கலெக்டர் கவுர வித்தார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
சிறப்பு தொழிற்கடன் விழாவில் 11 விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.11.74 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாமில் வருகிற 1-ந்தேதி சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது.
- சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில் பட்டி தெருவை சேர்ந்தவர் கள் ஜோதி என்ற மரியசாமி-விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகளுக்கும், ஏ.பி.டி. புது தெருவை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும் கடந்த 20-ந்தேதி திருமணம் நடந்துள் ளது.
இதைத்தொடர்ந்து மணமக்கள் மறுவீட்டிற்காக பெண் வீட்டிற்கு வந்துள்ள னர். அப்போது தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என கூறி சிறுமி பெற்றோரு டன் வாக்குவாதம் செய்து உள்ளார். ஆனால் பெற்றோர் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஊர்நல அலுவலர் மேரி ராசாத்தியிடம் சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் அவர் இதுகுறித்து விசா ரித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியை திருமணம் செய்த விஜய், அவரது பெற்றோர் முனீஸ்வரன் -சந்திரா, சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நடந்தது.
- முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 39-வது பேட்ச், 2023-24 பி.டெக் என்ஜினீயரிங் மாணவா்களுக்கான 10 நாள் புத்தாக்க பயிற்சி ெதாடக்க விழா பல்கலை வேந்தா் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணைவேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளா் வாசுதேவன், முதலாண்டு துறை டீன் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை கொடாய்டு இன்னவேசன் வர்த்தக செயல்பாட்டு இயக்குநா் ராம்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சிகளை தொடங்கி வைத்தார். மாணவா் சோ்க்கை அதிகாரிகள் டீன் லிங்குசாமி, ராஜூ பேசினா். முடிவில் மாணவா் நல இயக்குநா் சாம்சன் நேசராஜ் நன்றி கூறினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை பயிலரங்கு நடந்தது.
- அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஐபி மேலாண்மை' குறித்த பயிலரங்கு நடந்தது. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினார். காப்புரிமை, நகல் உரிமை, வர்த்தக முத்திரை, தொழில் துறை வடிவமைப்புகள், புவியியல் குறியீடுகள் போன்ற பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
உலகளாவிய கண்டு பிடிப்பு குறியீடு 2022-ல், அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளில் இருந்து மூன்றில் ஒரு காப்புரிமை விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்றும் இருப் பினும் இந்தியாவை காட்டிலும் சீனா 25- 30 மடங்கு அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது என்றும் தெரிவித்தார்.கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.3 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- மோசடியில் ஈடுபட்ட அக்காள்-தம்பியை மல்லாங்கிணறு போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள தோனுகால் பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 33). இவருக்கு திருச்சியை சேர்ந்த அந்தோணி மற்றும் அவரது சகோதரி புனிதா ரோசி ஆகியோர் அறிமுகமாகினர்.
தங்களுக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ளதாகவும், தங்களால் நல்ல வேலை வாங்கி தரமுடியும் எனவும் ஆசைவார்த்தை கூறினர்.
மேலும் வேலைக்கு ரூ.9 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய பழனிக்குமார் தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8 லட்சத்தை புனிதாரோசி வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் டெல்லி சென்று அவர்களிடம் நேரடியாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பிதரவில்லை. இதை யடுத்து பழனிக்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை அழைத்து விசாரித்த பின்னர் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இதுகுறித்து மீண்டும் போலீசில் பழனிக்குமார் புகார் செய்தார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள்-தம்பியை தேடி வருகிறார்கள்.
- அரசு பள்ளி ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- தாய்-மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பாரதி தாசன் (வயது 55). கீழ்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்க்கிறார். இவர் பாஸ்கரன் என்பவர் வீட்டில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஒத்திக்கு குடி யிருந்து வருகிறார்.
இந்த நிலையில் பாரதிதா சனிடம் அந்த வீட்டை வாங்கி கொள்ளுமாறு பாஸ்கரன் கூறி உள்ளார். இதையடுத்து ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வீட்டை வாங்கி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 18.9.2021ம் ஆண்டு பாரதிதாசன் ரூ.10 லட்சத்தை பாஸ்கரனிடம் கொடுத்து உள்ளார். பின்னர் மூல பத்திர நகலை கேட்டு வாங்கினார்.
அதில் அந்த வீடு மதுரையை சேர்ந்த சிவபிரியா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரனிடம் கொடுத்த பணத்தை பாரதிதாசன் திரும்ப கேட்டார். அதற்கு சிவபிரியாவிடம் பேசி வீட்டை வாங்கி தருவதாக அவர் கூறி உள்ளார்.
ஆனால் சிவபிரியாவிடம் நேரடியாக பேசி வீட்டை ரூ.22 லட்சத்துக்கு வாங்கி கொண்டார். ஆனால் பாஸ்கரன் ஒத்திப்பணம் உள்பட ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து அருப்புக் கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதிதாசன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அருப்புக்கோட்டை டவுன் போலீசார் பாஸ்கரன், அவரது தாயார் நாகலட்சுமி (72) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தக்கலப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகேந்திரகனி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 35). வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து உள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று கிருஷ்ணவேணியை கடையை பார்த்து கொள்ளு மாறு நாகேந்திரகனி கூறி னார். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணவேணி யின் தாயார் மாரியம்மாள் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி அரசரடி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவரது மனைவி சித்திரைச்செல்வி. மாரிமுத்து குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். வீட்டுக்கு செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று மனைவி வெளியே சென்றிருந்தபோது மாரி முத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்திரைச்செல்வி வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் விமல்குமார் (35). இவரது மனைவி சொர்ண லதா (30). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட வர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச் சினை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த விமல்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ளலாம்.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர் காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்று டன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம்.
இம்முகா மில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற Google Form-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள லாம்.
இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






