என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் நடத்திய வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க தலைவர் தெய்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சிவனாண்டி, வட்டத் தலைவர் அழகர், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், நில அளவை ஒன்றியம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சட்டநாதனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.






