search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டம்-ஒழுங்கு ஆய்வுக்கூட்டம்
    X

    விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    சட்டம்-ஒழுங்கு ஆய்வுக்கூட்டம்

    • விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    சாலைகளில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள வேகத் தடைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று தொடர்ந்து காவல்துறை மூலம் நடத்தப்படுகிறது.

    மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும், போதை பொருள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் குழு கண்கா ணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கோட்டப் பொறியாளர்(நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு) பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×