என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டயக் கணக்காளர்"

    • பட்டயக் கணக்காளர்கள் சங்கத்துடன் காளீஸ்வரி கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை மற்றும் பட்டயக் கணக்காளர்கள் சம்மேளன சிவகாசி கிளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி முதல்வர் பால முருகன் தலைமை தாங்கி னார். துறை தலைவர் குருசாமி வாழ்த்தி பேசி னார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் பாலமுருகன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் சம்மேளனம் சிவகாசி கிளை தலைவர் பால முருகன், செயலர் சுரேஷ் சந்தர், பொருளாளர் அருள்மொழி வர்மன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு மாணவர் அவி னாஷ் வரவேற்றார். மாணவி சங்கீதப்பிரியா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார். மாணவி பெமினா கேத்திரின் நன்றி கூறினார். மாணவிகள் சங்கீதப்பிரியா, ஸ்ரீமலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.

    ×