என் மலர்
விருதுநகர்
- உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
கீழதிருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் செல்லசாமி. இவருக்கு செங்கமபட்டி பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை தாசில்தார் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு ஆலையை சோதனை செய்தார்.
அங்கு பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்ததும், அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர் ராமலட்சுமி, போர்மேன் மாடசாமி ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணிடம் நகை மோசடி செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் அமுதாபுஷ்பம் (வயது 46). இவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இேத தீப்பெட்டி ஆலையில் மானேஜராக வேலை பார்க்கும் முத்துகுமார் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அமுதாபுஷ்பம் தனது 17 பவுன் நகையை கொடுத்துள்ளார். அதனை முத்துகுமார் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி அமுதாபுஷ்பம் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிளகாய் பொடியை தூவி இளம்பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் குருதேவியை (வயது 19) மதுரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அ.முக்குளம் அருகே புல்வாய்க்கரை மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நரிக்குடிக்கு எந்த வழியாக செல்ல வேண்டும்? என்று கேட்டனர்.
இதற்கு கார்த்திக் நீங்கள் வந்த வழியாகவே செல்லுங்கள் என்று கூறினார். அப்போது மர்ம நபர்கள் திடீரென்று கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை கார்த்திக் மற்றும் குருதேவி மீது தூவினர்.
இதில் நிலைகுலைந்த குருதேவியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
- வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே உள்ள உஷார்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 28). இவர் பந்தல்குடி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அந்த வழியாக வந்த தங்கவேல் பாண்டி என்பவர் ஜெயலட்சுமியிடம் , அவரது ஊர் வழியாக செல்வதாக கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
இதுபற்றி அறிந்த ஜெயலட்சுமின் கணவர் மணிகண்டன், தங்கவேல் பாண்டியனிடம் நீ எப்படி எனக்கு மனைவியை மூட்டைகளை அழைப்பு வரலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி தகராறு செய்துள்ளனர் .அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்.இதுபற்றி ஜெயலட்சுமி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
- கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் அங்காளபரமேசுவரி (வயது 26) இவரும் ,அவரது மகளும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மண்வெட்டி காலில் வெட்டியதில் அங்காள பரமேசுவரிக்கு காயம் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று நின்றிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அங்காள பரமேசுவரி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர்.
இதுபற்றி நரிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது புகார் வந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பகுதியை சேர்ந்த இளம்பெண் பிளஸ்-1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரும், முத்து லட்சுமி என்ற பெண்ணும் தோழிகளாக பழகி வந்தனர்.
இதனால் இளம்பெண் அடிக்கடி தோழி முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று வருவார். அப்போது முத்துலட்சுமியின் அண்ணன் தலைமலை என்பவரும், இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு காதலாக மாறியது.
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இளம் பெண் வீட்டுக்குச் சென்றபோது தலைமலை அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் இளம் பெண் கர்ப்பமானார்.
இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடந்த 16-ந் தேதி குருணை மருந்தை(விஷம்) குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமலை மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமலையை தேடி வருகின்றனர்.
- என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
- பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கம் சார்பில் ''என்ஜினீயரிங் மாணவர்ளுக்கான செயற்கை நுண்ணறிவியல் துறையில் உள்ள வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரையாற்றினார்.
மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், என்டர்ஜி நிறுவனத்தின் ஆலோசகர் ராஜராஜன் ஆறுமுகம் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தமது துறைசார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப துறையானது மிகவும் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்கள் அதில் தங்களை தகுதிப்படுத்துவதற்கு தேவையான மென்பொருள் பற்றிய விழிப்புணர்வும், செயற்கை நுண்ணறிவின் வேலைப்பாடு, செயல்முறை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில புலமை மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கார்த்திகேயன், பேராசிரியர் தனம் ஆகியோர் செய்திருந்தனர்.
- டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.
பொது மக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்திடுமாறும், மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடுமாறும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வண்ணம் தங்களது நிறுவனங்களை சுத்தமாக பேணிகாத்திட கேட்டுக்கொள்ளப்ப டுகின்றனர்.
வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை முடித்து திறக்கப்படுவதால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும், பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தகவல் தெரிவித்து பள்ளி குழந்தைகளை காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் காய்ச்சல் தொடர்பான விடுப்பிலிருந்தால் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல ஆலோசனை தருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது.
பொது மக்கள் காய்ச்சல் கண்ட உடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். பொது மக்கள் அரசு அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற செல்ல வேண்டாம். போலி மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அரசின் நிலையான சிகிச்சை முறைகளை செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டத்தினை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.
ராஜபாளையம்:
மதுரை சி.எம்.ஆர். சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் பேசிக்கொண்டனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
மாரிமுத்துவின் காதலியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில்வதுரை என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வில்வதுரை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
ஒரே பெண்ணை 2 பேர் காதலித்து வந்ததால் மாரிமுத்துவுக்கும், வில்வதுரைக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அடிக்கடி இவர்களுக்குள் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து உயிரோடு இருந்தால் காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாது என எண்ணிய வில்வதுரை அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் வேலையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த மாரி முத்துவை, வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசி யுள்ளனர். பின்பு அவரிடம் வில்வதுரை நைசாக பேசி காரில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு மாரி முத்துவிடம் வில்வதுரை கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கு அழைத்து வந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள், மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்துவின் உடலை ஒரு சாக்கு மூட்டை யில் கட்டி காரில் வைத்து செய்வதறியாது ஊர் சுற்றி வந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய் பகுதியில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து சாக்குமூட்டையை கண்மாயில் போட்டுவிட்டு கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதற்கிடையே மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் வில்வதுரையை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்திக்கொண்டு சென்று அடித்துக்கொலை செய்து உடலை கண்மாயில் வீசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வில்வதுரை, அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், மாரிமுத்துவின் உடலை வீசியதாக கூறப்பட்ட ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய்க்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் கூறிய இடத்தில் தேடிப்பார்த்தபோது சாக்குமூட்டை கிடந்தது. அதில் மாரிமுத்துவின் உடல் எலும்புக்கூடான நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கடத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் 12-ம் வகுப்பு படித்துவிட்டு கம்ப்யூட்டர் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று 11 மணிக்கு வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.
- தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (30). மில் தொழிலாளியான இவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்த போது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அழகர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அழகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






