வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்கு

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்
வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே உள்ள உஷார்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 28). இவர் பந்தல்குடி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அந்த வழியாக வந்த தங்கவேல் பாண்டி என்பவர் ஜெயலட்சுமியிடம் , அவரது ஊர் வழியாக செல்வதாக கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

இதுபற்றி அறிந்த ஜெயலட்சுமின் கணவர் மணிகண்டன், தங்கவேல் பாண்டியனிடம் நீ எப்படி எனக்கு மனைவியை மூட்டைகளை அழைப்பு வரலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி தகராறு செய்துள்ளனர் .அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்.இதுபற்றி ஜெயலட்சுமி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com