என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • லோகேசை அவரது தந்தை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.
    • மகனை கணவர் அழைத்து சென்றதால் வனிதாராணி மனவேதனை அடைந்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வனிதா ராணி(வயது 35). இவரது கணவர் வேலுச்சாமி. குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    மனைவியை பிரிந்து சென்ற வேலுச்சாமி விருதுநகர் அருகே மலைப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகன் லோகேஷ் (15), காவிய பிரியா (12) ஆகிய இருவரும் தாய் வனிதா ராணியுடன் வசித்து வந்தனர்.

    அவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து மகன், மகளை படிக்க வைத்து வந்தார். லோகேஷ் 10-ம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அவர் தன்னை பாலிடெக்னிக்கில் சேர்க்குமாறு தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் படிக்க வைக்க வசதியில்லை என்று தாய் வனிதா ராணி கூறியிருக்கிறார்.

    தாய் அவ்வாறு கூறியதை லோகேஷ் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து லோகேசை அவரது தந்தை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். மகனை கணவர் அழைத்து சென்றதால் வனிதாராணி மனவேதனை அடைந்தார்.

    இதனால் தனது மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வனிதாராணி மற்றும் அவரது மகள் காவிய பிரியா ஆகிய இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதுகுறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தாய்-மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து நடத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 35). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் கேலி- கிண்டல் செய்து வந்தனர். இவர்களின் செயல்கள் எல்லை மீறிச் செல்லவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஸ்தூரி இது தொடர்பாக மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனை முத்துவை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் வந்த 2 பேரும் சம்பவத்தன்று கஸ்தூரி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் கத்தி மற்றும் அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் கஸ்தூரியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கஸ்தூரி கொடுத்த புகாரின்படி மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.

    • வரதட்சணை கேட்டு மனைவியை வங்கி ஊழியர் கொடுமைப்படுத்தினார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் வாசகசாலை தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 21). இவருக்கும், சென்னையில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் மாரியப்பன் (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் 7 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

    அவர் நீண்ட நாட்களாக மனைவியை அழைத்துச் செல்ல வராததால் வந்து அழைத்துச் செல்லும்படி பவித்ராவின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மேலும் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் கொடுத்தால் தான் மனைவியை அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த 4.7.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீசில் பவித்ரா புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாரியப்பன் தனது மனைவியை ஒரு மாதத்தில் அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியை அழைத்துச் செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து பவித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    அதன்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம், பவித்ராவின் கணவர் மாரியப்பன், அவரது பெற்றோர் சுப்பையா, பொன்னுத்தாய் மற்றும் உறவினர் மஞ்சுளா தேவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் காயத்திரி தேவி (வயது 27). இவருக்கும், கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 35 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கியு ள்ளனர்.

    சரவணன் திருப்பூரில் செய்யப்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் 8 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் மேலும் 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த காயத்திரி தேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து காப்பாற்றியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக கடந்த 13.09.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சரவ ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி 1.12.2021 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் மரியபாக்கி யம், காயத்திரி தேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் மீனா, கமலா, தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வங்கி பெண் மேலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் நர்மதா (வயது 33). இந்த வங்கியில் கடந்த 8.11.2013 அன்று ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், தனது மகன் விக்னேஷ் படிப்பதற்காக ரூ. 2 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். அதனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மேலாளர் நர்மதா மற்றும் கிளை மேலாளர் சண்மு கப்பிரியா, வங்கி ஊழியர் சுப்புராஜ் ஆகியோர் முருகேஷ் வீட்டுக்கு சென்று கல்வி க்கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டுள்ளனர்.

    அப்போது அங்கிருந்த முருகேசின் உறவினர் ஒருவர் வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் வங்கி மேலாளர், நர்மதாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    • தேவதானம், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி பீடர், ராமன்பட்டி பீடர், தேவதானம் மற்றும் முகவூர் பீடர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (30-ந் தேதி) நடைபெற உள்ளன.

    ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலையடிப்பட்டி, அழகை நகர், எம்.ஜி.ஆர். நகர், குறிஞ்சி நகர், ராமச்சந்திராபுரம், வேப்பங்குளம், அ.ராமலிங்கபுரம், அச்சம் தவிர்த்தான், நரையங்குளம், தேவதானம், கோவிலூர், முகவூர், பாரதி நகர், தளவாய்புரம், செட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

    விருதுநகர் மின்கோட்டத்தில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் விருதுநகர் பர்மா காலனி, சீதக்காதி தெரு, பெருமாள் கோவில் தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, பாரப்பட்டி தெரு, சிவன் கோவில் தெரு, அன்னை சிவகாமி புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    துலுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே துலுக்கப்பட்டி மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளன. ஆதலால் வெள்ளக்கோட்டை, பந்தல்குடிரோடு, அரசு மருத்துவமனை, நேரு மைதானம், அண்ணாநகர், திருச்சுழிரோடு, ராஜீவ்நகர், ஜெயநகர், விஜயநகரம், பிள்ளையார் கோவில் தெரு, காந்திநகர், பூபால் நகர், ஈ.பி. ரோடு, மீனாட்சி புரம், நேதாஜிரோடு, மேட்டாங்கரை, கைலாச ஊரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறியுள்ளார்.

    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4,800 மாணவர்களுக்கு ரூ.106 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ரூ.120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கல்வித்திருவிழா நடத்தி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும், கல்விக்கடன் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கங்களை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 46 ஆயிரம் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலி ருந்தே வேலை யின்மையின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சின்னசுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் பசும்பொன். இவர் அதே பகுதியில் பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென எலெக்ட்ரிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் தீ மளமளவென்று பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின.

    கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தீப்பிடித்து எரிந்த கடைக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அவைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி விட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    • இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விருதுநகர்

    தொடக்க கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜூலை 7-ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ந் தேதியும் நடைபெற உள்ளன.

    கடந்த 2021-2022 உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. பணி நிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களின் பெயர்களை நீக்க வேண்டியதில்லை.

    அதே கல்வி ஆண்டில் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் விவரங்களை கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப்பட்டியல் ஏமிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    அதற்கு முன்னதாக திருத்தங்கள் அனுப்ப வேண்டும். முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
    • நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    'அக்னி பத்' திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில், சத்தியாகிரக போராட்டம் நகர அஞ்சலகம் முன்பு நடந்தது. நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் முருகேசன், இலக்கிய அணி சுந்தரம், ஆர்.டி.ஐ. மாநில துணைத் தலைவர் சுந்தரம், மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மகளிர் அணி மாநில இணைச் செயலாளர் காளீஸ்வரி, மம்சாபுரம் ஜெயக்குமார், வத்திராயிருப்பு லட்சுமணன், வசந்தம் சேதுராமன், துள்ளுக்குட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் காமராஜர் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணவெங்கட்ராமன் வரவேற்றார். சுதா, தீபா ஆகியோர் தேவார பண்ணிசை பாடல் பாடினர்.

    நெல்லை சிவ காந்தி "திருமுறைத்தமிழ்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. சிவனடியார்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மன்றத்தின் துணைத்தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை இணைச்செயலர்கள் முத்தையா, கணேசன் உட்பட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×