என் மலர்
விருதுநகர்
- சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது.
- இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி "ஒற்றுமை தினம்" கொண்டாடப்பட்டது.
முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அதன் பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒற்றுமை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதல்வர் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பயிற்சி, வேலை வாய்ப்புக்கான விருது பெங்களூருவில் வழங்கப்பட்டது.
- மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.
சிவகாசி
கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது.
இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரிக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.
பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையானது முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு துறை சார்ந்த மற்றும் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.
சிறந்த முறையில் செயலாற்றிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார், முதல்வர் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
- இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தி லுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று பாசனத்திற்காக தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையின் மூலம் நேற்று முதல் 9 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 28.2.2023 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மா ய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதான கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
இந்த தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைய உள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திரா யிருப்பு, கூமாபட்டி, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டி கரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.
இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவ காலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவதானம் சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி அமைச்சர்கள் சாத்தூர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரது ஆலோசனையின்படி ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை நீரை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.
இதில் கோட்டாட்சியர் அனிதா, பொதுப்பணித் துறை பொறியாளர் தனலட்சுமி, வட்டாட்சியர் சீனிவாசன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சரவணன், ஜான்சி, பொன்குரு கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் முருகனின் உடலை உறவினர்கள் எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த நபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்ததாக உறவினர்கள் சேதுராமன், வீரராஜ், போஜராஜன், வெங்கட்ராமன், கோபால், சங்கரலிங்கம் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவலிங்கா புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவர் ஆலங்குளம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு ஆலங்குளத்தில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு அங்கு வந்து ஆறுமுகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் பரம குருபரன் என்பவரின் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த அதே கும்பல் அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க காசுகளை திருடினர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ராஜலட்சுமி 55 என்பவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 1500 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீழ ராஜகுல ராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
- தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.
நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.
மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.
- பஸ் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
- மழை பெய்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிராம் மில் அருகே ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக்கொண்டு சிவகிரியில் இருந்து சென்றது.
அரசு பஸ்சை ஆம்புலன்சு வேன் முந்த முயன்றபோது எதிரே ஜே.சி.பி. வாகனம் வந்தது. அதன் மேல் மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக ஆம்புலன்சை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னே சென்ற அரசு பஸ் மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக சென்ற நபரை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மதுரைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த விபத்தில் ஆம்பு லன்சில் அமர்ந்திருந்தவர் விபத்தில் சிக்கி மீட்க முடியாத நிலையில் இருந்தார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சம்பத் (வயது 26), ராம்குமார் (29), சிவகுமாரி (49) ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த பஸ் பயணி பாண்டிச்சேரியைச் சேர்ந்த குணாலும் (27) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் (29), முகமது பாசிக் (25) இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததால்இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
- விருதுநகர்:முதல் முறையாக புத்தக கண்காட்சி நடக்கிறது.
- புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் ன்று உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் விருதுநகரில் முதல்முறை யாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.
இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு தனித்தனியாக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.






