என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இந்த முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசுக ளையும், சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை வளர்ச்சிக்கு எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
தற்போது மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஊசிகள், மருந்துகள் என அனைத்தும் கட்டணமில்லாமல் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.
மேலும் அனைத்து கிராமங்களிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் கால்நடை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் சேகர், பயனாளிகள், பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் கருப்பஞானியார் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
- 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் சாலியர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பஞானியார் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் 20 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்பஞானியார் சுவாமிக்கு 15 கிலோ எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரமும், பொன்னப்பஞானியார் சுவாமிக்கு 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
அலங்காரம் செய்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் சுவாமிகள் மீது சாத்தப்பட்ட சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூஜைக்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு செய்திருந்தனர்.
- விருதுநகர் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நிறுவனர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தங்கராஜ், 511 இளங்கலை, 11 முதுகலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.
- பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ். தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம், 2021-ன்படி, கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபு ரியும் அனைத்து தொழிலாளர்களும் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி அச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்து தரப்பட வேண்டும் என்று அந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிட ப்பட்டு உள்ளது.
மேற்கண்ட சட்ட திருத்தத்தை கடைப்பி டிக்காத விருதுநகர் மாவட்டத்தில் 7 நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அக்டோபர் மாதம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பணியாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 5 கல்வி நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வில் தொழி லாளர் உதவி ஆய்வர்கள் செல்வராஜ், பாத்திமா, முருகள், துர்கா, சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி. பிளஸ்-2 படித்து வந்த இவருக்கு வயிற்கு வலி இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரியாபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்காயி (48) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகள் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூக்காயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறையை சேர்ந்தவர் சோலைசாமி. இவரது மகன் சதீஸ்வரன் (28). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன் பின் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த சதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் கல்யாணி(24). இவரது கணவர் கணேஷ் 2 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த கல்யாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிவகாசி சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம் மற்றும் ராஜபாளையம் நகர் நல அலுவலர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரினிடம் விசாரணை நடத்தினர்.
- ஆக்னெஸ்ட் கேத்ரின் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடம் நர்சாக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டில் மருந்து மாத்திரைகள் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் கவிதேவநாதன் (வயது 5). இவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதைத்தொடர்ந்து அவனை அருகில் சிகிச்சை அளித்து வரும் நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரின் (35) என்பவரிடம் அழைத்து சென்றனர்.
அவர் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்ததும் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேஸ்வரன் புகார் செய்ததை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
சிறுவனின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டதும் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சிறுவன் உடலை சொந்த ஊரான வடக்கு மலையடிப்பட்டிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இதுபற்றி அறிந்த சிவகாசி சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம் மற்றும் ராஜபாளையம் நகர் நல அலுவலர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரினிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடம் நர்சாக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டில் மருந்து மாத்திரைகள் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனுக்கு ஊசி போட்ட டாக்டர் பாஸ்கரனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியருக்கு படிக்காத பெண் சிகிச்சை அளித்ததில் சிறுவன் பலியான சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
- செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிக அளவில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மழை காலமாக இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
- இந்த பள்ளி நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்த ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார். விழாவில் அருப்புக்கோட்டை உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் கரன்காரட் சமாதான புறாவை பறக்க விட்டார். எஸ்.பி.கே. கல்வி நிறுவன குழு தலைவர் ஜெயக்குமார் ஒலிம்பிக் கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் மனோகரன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, கோவில் டிரஸ்டி ராஜேந்திரன், உறவின்முறை துணைச் செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளிச்செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.
- விருதுநகர் அருகே கண்மாயில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
- துணி துவைக்க சென்ற பெண் ஒருவரும் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
- இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர்.
- பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மகேசுவரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்த தம்பதியினருக்கு யூவஸ்ரீ என்ற 10 வயது மகளும், கவிதேவநாதன் என்ற 5 வயது மகனும் உள்ளனர் .
மகேசுவரனின் மனைவி கற்பகவள்ளி உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 2 குழந்தைகளையும் மகேசுவரனின் தாயார் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை அறிந்து அவரிடம் ஊசி போட சென்றுள்ளனர். அங்கு சிறுவன் கவி தேவநாதனுக்கு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தான்.
உடனடியாக அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ப்ரீத்தி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின் உறவினர்களிடம் சமாதானம் செய்து உடலை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.
காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவனை இழந்த குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான சிறு பான்மையின மாணவ- மாணவிகள், பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30-ந்தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






