என் மலர்
விருதுநகர்
- என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் குரு பிரியா (வயது 17). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தற்கொலை
சம்பவத்தன்று குரு பிரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.
இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குரு பிரியா அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
அங்கு தனியறைக்கு சென்று கதவை பூட்டி கொண்ட குரு பிரியா வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது சேலையில் குருபிரியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
விசாரணை
தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்பட்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பி த்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பட்டாசு தொழிலாளியை கொலை செய்த மகேஷ், சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது42). இவர் பாட்டங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் மாலையில் சம்பள பணத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஊரணியான் மகன்கள் மகேஷ், சிவா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களிடம் தனது சம்பள பணத்தை எண்ணி தருமாறு சுந்தர்ராஜ் கூறியுள்ளார். அப்போது சகோதரர்கள் 2 பேரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மகேஷ், சிவா ஆகிய 2 பேர் சுந்தர் ராஜை குண்டுகட்டாக தூக்கி சுவரில் மோதச் செய்தனர். இதில் அவரது கழுத்து, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. வலியால் துடித்த சுந்தர்ராஜ் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சிட்டு கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு தொழிலாளியை கொலை செய்த மகேஷ், சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.
எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.
மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
- மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனை யாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியி டங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக (ஆன்லைன்) மூலம் கடந்த 13.10.2022 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும். எனவே, விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நேரத்தில் எழும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க, முன்கூட்டியே இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
- இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.
- சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், ரெங்கப்பநாய க்கன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.49 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், படந்தாலில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
- அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் சுந்தரபாண்டியம் தேவர் சிலை அருகே சாக்கு மூடைகளுடன் நின்ற மினி லாரியை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமியா புரத்தை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் சண்முகராஜ் (32), டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31), லோடுமேன் செல்வகுமார் ஆகியோரை தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் 26 மூட்டைகளில் இருந்த 1040 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர் ஜோதி ஊர்வலம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதி ஊர்வலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்னண் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்கள், தீயணைப்பு துறை, நகராட்சி ஊழியர்கள்,ரோட்டரி சங்கத்தினர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கலுசிவலிங்கம், மேலாளர் பாபு, பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்ரியா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயதீபா, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.
- மழைசேதம் குறித்து அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 1.10.2022 முதல் தொடங்கி உள்ளது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு விருது நகர் மாவட்ட நிர்வாக த்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
அருப்புக்கோட்டை வட்டம், பாலையம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தைகள் சித்தார்த் (வயது 8) மற்றும் சந்திரமணி (10) ஆகியோர் அந்த ஊரில் உள்ள ஊரணியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம்.
தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






