என் மலர்
விருதுநகர்
- இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.
- விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
- கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிவகாசி,
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.
விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,
வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பி னர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும்.பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு புல்கறனைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகிய வற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்ப டுத்தப்படும்.தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறி வதற்கு வழக்கமான கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ் இயக்கப்படுவதில்லை.
- கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை:
தமிழகத்தில் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யும் பரிதாப நிலை உள்ளது.
இந்த பயணம் சில நேரங்களில் ஆபத்தாக முடிந்து உயிரை பலி வாங்குகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று காலை அரசு பஸ்சின் படியில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் மாதேஸ்வரன் (வயது19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மாதேஸ்வரன் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை அருப்புக்கோட்டையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்த அரசு பஸ்சில் மாதேஸ்வரன் ஏறினார். ஆனால் அவரால் பஸ்சுக்குள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பஸ்சின் படியில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தார்.
ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அதிக அளவில் பயணிகள் ஏறியதால் பஸ்சில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாலவநத்தம் மெயின் ரோட்டில் அரசு பஸ் சென்றபோது படியில் நின்றிருந்த மாதேஸ்வரன் எதிர்பாராதவிதமாக தவறி நடுரோட்டில் விழுந்தார்.
இதில் அவரது தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்புகளால் முழுமையாக நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அருப்புக்கோட்டை,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகி ன்றன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஓரளவுக்கே கை கொடுத்துள்ளது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளன.
ஆனால் அருப்புக்கோட்டையில் விவசாயத்திற்கு அங்குள்ள பெரிய கண்மாய், செவல் கண்மாய், தூமைக்குளம் கண்மாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கண்மாய்களில் எந்தவித சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
இதனால் கண்மாயில் நீர் தேக்கப்படும் அளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதை தவிர தற்போது கண்மாய் முழுவதும் 75 சதவீதம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீர் கண்மாய்களில் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.
இதுகுறித்து அந்தப்ப குதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்ய வைத்து இறைவன் வரம் கொடுத்தாலும் அதிகாரிகள் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகதியினர் அதிருப்தியுடன் தெரிவித்த னர்.
- அருப்புக்கோட்டை தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
- காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சாகுல் ஹமீது,அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் ஏ.கே மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கொப்பைய ராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, நகர அவைத் தலைவர் கணேசன்.
மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம்,ஒன்றிய குழு துணை தலைவர் உதயசூரியன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் சோலையப்பன், 6-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணி முருகன், வார்டு பிரதிநிதி பாண்டியராஜன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
- சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
- படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர்ஒலி. இவரது மனைவி பஜ்ராள் பீவி (வயது 52). பஜ்ராள் பீவியின் தங்கை ரசீதா பீவி புளியங்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
உடல்நிலை பாதித்திருந்த அவரை பார்ப்பதற்காக தனது மகன் முகமது அப்சல்கானுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.அவரை பார்த்துவிட்டு மாலையில் தங்களின் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தென்காசி-ராஜபாளை யம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் விலக்கு அருகே வந்து கொண்டி ருந்தபோது தனக்கு தலை சுற்றுவதாக மகனிடம் பஜ்ராள் பீவி கூறியுள்ளார்.இதையடுத்து முகமது அப்சல்கான் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் பஜ்ராள் பீவி ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி றார்.
- வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. சேர்மன் வி.பி.எம். சங்கர் தொடங்கி வைத்தார். தாளாளர் பழனி செல்வி சங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்.
துணை சேர்மன் தங்க பிரபு முன்னிலை வகித்தார். இயக்குநர் நாச்சியார் கண்ணன் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா மற்றும் கலைக்கல்லூரியில்அடுப்பு இல்லாமல் சமைக்கும் உணவு திருவிழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன.
இதில் கலைக்கல்லூரி மாணவிகள் தனித்தனி குழுவாக இணைந்து அடுப்பு இல்லாமல் உணவுப்பொருட்களை சமைத்து காட்சிப்படுத்தினர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மாணவிகளின் மேம்பாட்டு திறன் வளர்ப்பு அங்கீகாரம் பெற்ற பேச்சாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் புத்தகத் திருவிழா தொடங்கியது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
விருதுநகர்,
விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் முதல் முறையாக வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து, நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முதலாவது விருதுநகர் புத்தக திருவிழா குறித்து இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமும், தப்பாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் ஸ்டான்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது.
- பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பினர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
காலையில் எழுந்த மோகன் காஸ்ட்ரோ மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
- தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர் 3552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருது நகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.
இதுகுறித்து செல்போன் எண். 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com-ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- குடிபோதையில் கொலை செய்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளை யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது.
தென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த இமானுவேல் ராஜா சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்கு மார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது குடிபோதை யில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.






