search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector launched"

    • விருதுநகரில் புத்தகத் திருவிழா தொடங்கியது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    விருதுநகர்,

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் முதல் முறையாக வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து, நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலாவது விருதுநகர் புத்தக திருவிழா குறித்து இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமும், தப்பாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் ஸ்டான்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×