என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free sample exam"

    • 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர் 3552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருது நகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    இதுகுறித்து செல்போன் எண். 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
    • என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்.ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓ எம் ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் தேர்வை தொடர்ந்து என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×