தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார். காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சாகுல் ஹமீது,அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் ஏ.கே மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கொப்பைய ராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, நகர அவைத் தலைவர் கணேசன்.

மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம்,ஒன்றிய குழு துணை தலைவர் உதயசூரியன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் சோலையப்பன், 6-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணி முருகன், வார்டு பிரதிநிதி பாண்டியராஜன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com