மில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

ராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது. பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பினர்.
மில் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

காலையில் எழுந்த மோகன் காஸ்ட்ரோ மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com