என் மலர்
நீங்கள் தேடியது "Fake Nurse Arreste"
- சிவகாசி சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம் மற்றும் ராஜபாளையம் நகர் நல அலுவலர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரினிடம் விசாரணை நடத்தினர்.
- ஆக்னெஸ்ட் கேத்ரின் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடம் நர்சாக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டில் மருந்து மாத்திரைகள் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் கவிதேவநாதன் (வயது 5). இவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதைத்தொடர்ந்து அவனை அருகில் சிகிச்சை அளித்து வரும் நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரின் (35) என்பவரிடம் அழைத்து சென்றனர்.
அவர் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்ததும் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேஸ்வரன் புகார் செய்ததை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
சிறுவனின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டதும் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சிறுவன் உடலை சொந்த ஊரான வடக்கு மலையடிப்பட்டிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இதுபற்றி அறிந்த சிவகாசி சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம் மற்றும் ராஜபாளையம் நகர் நல அலுவலர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த நர்சு ஆக்னெஸ்ட் கேத்ரினிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடம் நர்சாக பணியாற்றி உள்ளார். அந்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டில் மருந்து மாத்திரைகள் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனுக்கு ஊசி போட்ட டாக்டர் பாஸ்கரனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியருக்கு படிக்காத பெண் சிகிச்சை அளித்ததில் சிறுவன் பலியான சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






