சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிக அளவில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மழை காலமாக இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com