மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான சிறு பான்மையின மாணவ- மாணவிகள், பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30-ந்தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com