வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாக  ரூ.16 லட்சம் மோசடி
Published on

விருதுநகர்

ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை‌ பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com