என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகர் மாவட்டத்தில் பூப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய மையம் அமைத்து செயல்படுத்துவதற்கு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய விளையாட்டு மையம் அமைக்க பூப்பந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது,

    ஆகையால் முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் பயிற்றுநராக நியமிக்கும் வகையில் பூப்பந்து விளையாட்டு பிரிவில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர் பயிற்றுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் போலீசின் கணவர் மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர், நவ. 20-

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் முனிச்சாமி (வயது36). இவர் விருதுநகரில் தனியார் உயர்கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமிநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    அவர் மாயமானது குறித்து மனைவி பெண் போலீஸ் ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மகள் சீதாலட்சுமி (21). நேற்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்ற இவர் வீடு திரும்பவில்லை.

    அதுபற்றி தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாளை முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை (21-ந் தேதி) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் வருகிற 23-ந் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (21-ந் தேதி) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த கோமதிசங்கர்(47), பாண்டி(31) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர் மேற்கு போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது சின்னையா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வசந்த்(22), மதுரை பிச்சம்பட்டியை சேர்ந்தமகேஷ்(19) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சாத்தூர் டவுன் போலீசார் சங்கரநத்தம் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாத்தூர் தில்லை நகரை சேர்ந்த காளிராஜ்(27), எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்த கார்த்திக்(20), ஹேமந்த்(24) 3 பேரை மறித்து சோதனையி ட்டபோது 18 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும். 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெவ்வேறு விபத்துகளில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 39). இவர் சாத்தூர் டோல்கேட் ஆம்புலன்சு டிரைவராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் மகேஸ்வரன் வேலைக்கு புறப்பட்டார். ஆர்.ஆர். நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேம்பாளியை சேர்ந்தவர் ஆண்டி என்ற கல்லாபெட்டி (47). இவர் சம்பவத்தன்று டிராக்டரில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு புறப்பட்டார். டிராக்டரை வேம்பாளியைச் சேர்ந்த முத்தையா என்பவர் ஓட்டினார். நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் உள்ள புல்வாய்க்கரை காலனி பகுதியில் வந்தபோது டிராக்டரில் அமர்ந்திருந்த ஆண்டி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை (71). இவர் சம்பவத்தன்று நாகராஜன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தார். ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது சேர்மதுரை இறங்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.

    இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

    புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

    • விருதுநகர் கிழக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஓ.பி.எஸ். அணி, நிர்வாகிகள் அறிவிப்பு, OPS Announcement of Team, Administrators,

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அ மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட அவைத்தலைவர் மகாமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் பிச்சை, முத்துராஜன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் பிரேமா, எம்.ஜி.ஆர். அணி மாவட்ட செயலாளர் காளிராஜ், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன். திருச்சுழி தொகுதி செயலாளர் கஜேந்திரன், துணைச்செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் திருகண்ணன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் முத்து, செயலாளர் குருசாமி, துணை செயலாளர்கள் சரண்யா, போஸ், பொருளாளர் முத்துராஜா, ஒன்றிய பிரதிநிதி சடை யத்தேவர்.

    திருச்சுழி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, செய லாளர் அங்கயற்கன்னி, இணைச்செயலாளர் அரிகந்தநாகூர், பொருளாளர் பொன்ராஜ், ஒன்றிய பிரதிநிதி காசிராம். காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகானந்தம், செயலாளர் வெள்ளை முத்தன், இணை செயலாளர் பூமி, துணைச்செயலாளர் பஞ்சவர்ணம், பொருளாளர் பழனி, ஒன்றிய பிரிதிநிதி மணிகண்டன்.

    காரியாபட்டி மேற்கு ஒன்றிய அவை தலைவர் பழனியாண்டி, செயலாளர் போஸ், இணை செயலாளர் வெள்ளையம்மாள், துணைச் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய பிரிதிநிதி ஆண்டி. நரிக்குடி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருவேட்டை, செயலாளர் குண்டுமலை, இணை செயலாளர் பள்ளிக்கூடத்தான், துணைச் செயலாளர் கவிதா, பொருளாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய பிரிதிநிதி கார்த்திகை சாமி.

    நரிக்குடி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் நைனா முகமது, செயலாளர் நாராயணசாமி, இணை செயலாளர் காசி, துணைச் செயலாளர் முனியாண்டி, பொருளாளர் முருகேசன், ஒன்றிய பிரிதிநிதிகள் ராமகிருஷ்ணன், கணேசன். சாத்தூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் நமக்கோடி நாராயணன், செயலாளர் பெத்துரெட்டியார், இணை செயலாளர் லெட்சுமி, துணைச் செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராமசாமி, ஒன்றிய பிரிதிநிதி சேதுபதி.

    விருதுநகர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் நித்தியாநந்தம், இணை செயலாளர் ராமுதாய், துணைச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய பிரிதிநிதி தர்மலிங்கம். விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் செந்தில்குமார், செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் சரஸ்வதி, துணைச் செயலாளர் கெல்வின் அற்புதராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய பிரிதிநிதி மஞ்சுளா.

    சிவகாசி வடக்கு ஒன்றிய அவை தலைவர் குருசாமி, செயலாளர் தங்கசாமி, இணை செயலாளர் சிவஜோதிலெட்சுமி, துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் வடக்கத்தியான். சிவகாசி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் பாண்டிதுரை, செயலாளர் கணேஷ்வரன், இணை செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர்கள் வினிதா, ரஞ்சித் கோபி, பொருளாளர் கருப்பசாமி, ஒன்றிய துணை பிரதிநிதி கணேஷ் பிரபு.

    விருதுநகர் நகர அவை தலைவர் ஜேசுராஜன், செயலாளர் ராஜ்குமார், இணை செயலாளர் அம்பிகா, துணைச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன், பொருளாளர் யோகேஷ், மாவட்ட பிரிதிநிதிகள் ராமகிருஷ்ணன், ஜீவானந்தம்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினர்களுக்கான காலாண்டுக் கூட்டம் நடந்தது.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு விவரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்/தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    தொழிலாளர் துறையால் 1.10.2021 முதல் 31.10.2022 வரை கடைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 5 கடைகள் நிறுவனங்கள் மீது ரூ.85 ஆயிரம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

    18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 32 நிறுவனங்கள் மீது ரூ.2 லட்சத்து60 ஆயிரம் விருதுநகர் மாவட்ட கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையால் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 8 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீதும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

    சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கிராஜா மற்றும் தொழிலாளர் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதனை எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி னார்கள்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், குறிப்பிட்ட தேதி க்குள் செப்பனிடும் பணியை முடிக்க அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் புதியதாக தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி அலுவ லகத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்று விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்படும். இப்பணி மேலும் விரைவுப்படுத்த அடுத்த வாரத்தில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மண்டல அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திட்டப்பணியின் பொறி யாளர் ராஜாமணி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 53). விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி பவித்ரா நகரை சேர்ந்த அற்புதராஜ் (74) என்பவர் தனக்கு சொந்தமாக நெல்லை டவுனில் இடம் உள்ளது என மகாலிங்கத்திடம் கூறி உள்ளார்.

    இதனை நம்பிய அவர் அந்த நிலத்தை கிரையம் பேசினார். அற்புதராஜ் அதற்கு ஒப்புக்கொண்டதையடுத்து முன்பணமாக அவரது வீட்டில் வைத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.

    அதன் பின் ஒரு செண்டுக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் காசோலை மூலம் அற்புதராஜூக்கு கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் இடத்தை கிரையம் செய்து தர முன்வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மகாலிங்கம், நெல்லை சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, குறிப்பிட்ட இடம் வேறொருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பணத்தை திருப்பி தருமாறு அற்புத ராஜிடம் கேட்டபோது, அப்போது அவர் ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு பணத்தை திருப்பித்தர மறுத்து விட்டார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இந்த மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாயிகளுக்கு வழங்க வேளாண் எந்திரங்கள், கருவிகளுக்கான வாடகை நிர்ணயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடை பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக் கருவியுடன்) 1 மணிக்கு ரூ.500- வாடகையிலும், நெல் அறுவடை எந்திரம் (டிராக் வகை) ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880-ம், சக்கர வகை நெல் அறுவடை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,160 -ம், மண் தள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,230-ம், சக்கர வகை மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.890-ம், டிராக் வகை மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,910- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்துடன் இயங்கக் கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணிக்கு ரூ.450- என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம்.

    இது தொடர்பாக விருது நகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), விருதுநகர் (தொலைபேசி எண். 90802 30845) அலுவலகத்தையும், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வத்ராயிருப்பு விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), ஸ்ரீவில்லிப்புத்தூர் (தொலைபேசி எண். 94422 62017) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு டேனிஸ்டன், செயற் பொறியாளர் (வே.பொ.), இணை இயக்குநர் (வேளாண்மை) அலுவலக 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் (தொலைபேசி எண். 94431 72665, 94432 12311) என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×