என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா-புகையிலை"
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த கோமதிசங்கர்(47), பாண்டி(31) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மேற்கு போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது சின்னையா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வசந்த்(22), மதுரை பிச்சம்பட்டியை சேர்ந்தமகேஷ்(19) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சாத்தூர் டவுன் போலீசார் சங்கரநத்தம் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாத்தூர் தில்லை நகரை சேர்ந்த காளிராஜ்(27), எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்த கார்த்திக்(20), ஹேமந்த்(24) 3 பேரை மறித்து சோதனையி ட்டபோது 18 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் ஆகும். 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- சர்வ சாதாரனமாக நடக்கும் கஞ்சா-புகையிலை விற்பனை செய்யப்படுகிறது.
- இதனை போலீசார் தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
மதுரை
மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பாக்கெட்டுகள் விற்பது சர்வசாதாரனமாக நடந்து வருகிறது. குறிப்பாக சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி அருகில் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் கஞ்சா, புகையிலை பாக்கெட்டு களை விற்கின்றனர்.
இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா, புகையிலை பாக்கெட்டுகளின் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன். மதுரை நகரில் கடைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கஞ்சா விற்றதாக 7 பேரும், புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்றதாக கடைக்காரர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மதுபாட்டில் களை அதிக விலைக்கு விற்றதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் கடந்த சில மாதங்களாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட புகை யிலை பாக்கெட்டுகள் கடை களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி,பெரியார் பஸ் நிலையம், காமராஜர் சாலை, ஜெய்ஹிந்துபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை.
மேலும் ஆற்றுப்பகுதி, திருப்பரங்குன்றம், விளாச்சேரி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனை போலீசார் தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.






