என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பியை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஊர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் முத்துகுமார், அவரது அண்ணன் அஜித்குமார், தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சந்திரகுமார் அவரது மகன் சூர்யா, பார்த்திபன், பாலமுருகன், தாஸ்குட்டி ஆகிய 5 பேரும் காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் அஜித்குமார், அரவிந்த்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முத்துகுமார் புகார் செய்ததின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிப்புத்தூர்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. டிரஸ்டி டாக்டர் அக்சயா வரவேற்றார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த முதல்வர் முருகதாசன், முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற கவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தொழிலதிபர் ராம்சிங்கும், விருந்தினராக ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாமும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களை ஆங்கிலத்துறை ஆசிரியை இந்திரா ரபீந்திரன் அறிமுகம் செய்தார்.

    பள்ளி குழுமத்தலைவர் குமரேசன் விருந்தினர்களை கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்கள் பேசினர். முதல்வர் அனுசுயா ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி நன்றி கூறினார்.

    • கோவில் திருவிழாவில் எலக்ட்ரீசியனை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததை அந்த வாலிபர் தட்டிக்கேட்டார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று 12-ம்நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

    இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தமிழ்பாண்டி (வயது22) என்பவரும் கலந்து கொண்டார். அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததால் ஸ்ரீரங்கபாளையம் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணபவன் தட்டிக்கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்பாண்டி, சரவண பவனை ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கினார். இந்த சம்பவத்தில் சரவணபவன் படுகாயம டைந்தார். இதனை கண்ட தமிழ்பாண்டி தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி சரவணபவன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து சரவணபவனை தாக்கிய தமிழ்பாண்டியை தேடி வருகிறார்.

    • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
    • இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி(29). இவர் அண்ணாநகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது. இங்கு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மர்மநபர்கள் உண்டியலை எடுத்துச்சென்று அதில் இருந்த பணத்தை திருடிவிட்டனர். இதுபற்றி அறிந்த பால்பாண்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • இந்த பயிற்சி வகுப்பை விருதுநகர் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2-வில் சிறப்பாக படித்த 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    பயிற்சி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரில் பயின்று வரும் 4 மாணவர்கள், தாங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம், அதற்காக தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டனர்?, படிப்பதற்கான வழிமுறைகள், தேர்வை கையாண்ட முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கி ணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே கிராமத்தில் வழக்கமாக உள்ளது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது வெற்றியூர் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மருதுடைய அய்யனார் கோவில் அருகில் பெருவஞ்சி கண்மாய் உள்ளது.

    இந்த கண்மாயின் மூலம் 85 ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே இந்த கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன் பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் கொடுங்குளம், புதுவெட்டி, சாத்தரசன்பட்டி, காளக் கண்மாய், கருங்குளம், வாவாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    முன்னதாக கிராம பெரியவர்கள் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் விரால், கெழுத்தி, கெண்டை, சிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கின. அதனை கிராம மக்கள் மகிழ்ச்சியாக அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் பலர் மீன்களை பிடித்த சம்பவம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    • வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர்.
    • விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அருப்புக்கோட்டை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாட்டரி சீட்டுகளால் மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்ததால் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் லாட்டரிகளும் செயல்பட்டு வருகிறது. இவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்த மனோகரன் (வயது 42) என்பவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 700 ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை (17-ந் தேதி) மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை (19-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள் ளது.

    சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஆர்.எஸ்.எஸ்.பேரணி-பொதுக்கூட்டம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிறது.
    • பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமணன், முருகன், பேராசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்று கிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ராகுல்காந்தி பதவி பறிப்பு அநீதியானது என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 140 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல் காந்தி பதவிபறிப்பு என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கர்நாடக மாநிலம் கோலார் சட்டசபை தொகுதியில் பேசிய பேச்சின் அடிப்படையில் குஜராத்தில் தீர்ப்பு பெற்று அவர் வீட்டை காலி செய்யும் வரை பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனி மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். கர்நாடக மாநில சட்ட சபையின் போதும் இந்த பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொள்ளும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தி.மு.க.வினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை தி.மு.க.வினர் சட்டபூர்வமாக எதிர்கொள்வர்.

    மத்திய அரசு சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறியலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா காலங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.
    • தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது இருதரப்பினரிடையே ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து மோதல் ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஏற்படும் தகராறுகளை தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவில் திருவிழாக்களில் மோதல் ஏற்படும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் கோவில் திருவிழா வின்போது மோதல் ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் ராஜ பாளையத்திலும் திருவிழா ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனிப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அப்போது தான் விருதுநகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் மோதல்கள் தடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×