என் மலர்
உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
- வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அருப்புக்கோட்டை:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாட்டரி சீட்டுகளால் மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்ததால் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் லாட்டரிகளும் செயல்பட்டு வருகிறது. இவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்த மனோகரன் (வயது 42) என்பவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 700 ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






