என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • விடுமுறைக்கு சென்ற வாகனங்கள்
    • ஒரே நாளில் 45 ஆயிரம்

    விழுப்புரம்:

    தென்மாவட்டங்களுக்கு விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் ஒரே நாளில் 45 ஆயிரம் வாகனங்கள் தலைநகர் திரும்பின. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையாட்டி கடந்த 10,11 தேதிகளில் தென்மாவட்டங்களுக்கு விடுமுறையை கொண்டாட சென்னை தலைநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து 1லட்சத்து 10ஆயிரம் வாகனங்களில் சென்றனர்.

    நேற்று விடுமுறை முடிந்த நிலையில் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின.நேற்று மாலை 6.30 மணிவரை 28 ஆயிரம் வாகனங்களும், அதிகாலை 6மணி வரை 45 ஆயிரம் வாகனங்கள் டோல்கேட்டை கடந்தன.வாகனங்கள் அதிகமாக சென்னை நோக்கி சென்றதால் 8 வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் , டோல் பிளாசாவை நெரிசலின்றி எளிதாக கடந்தன.சாலையில் வாகனங்கள் அதிகரிக்க ஆரம்பித்ததால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, தாசில்தார் முகமது அலி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில் குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    • மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர்.
    • ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் உழவு மற்றும் நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரைப்பகுதி நோக்கி தாக்குகிறது.

    இதனால் மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர். இதுபோல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவர் கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கீழ் புத்துப்பட்டு, அனுமந்தை, கூனி மேடு, படிச்ச மேடு, செட்டிகுப்பம், ஆட்சிக்காடு, கைப்பணி குப்பம், அழகன் குப்பம், முட்டுக்காடு குப்பம் போன்ற 19 மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 500 மணல் மூட்டைகள் வளர்ச்சி அலுவலர் ராமு தலைமையில் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.

    ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய இந்த மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது. அதுபோல் சாலை துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சீரமைக்க இந்த 500 மணல் முட்டையை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இந்த பகுதியில் ஏராளமான உப்பளங்கள் உள்ளது. அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர். இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர்.

    இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ்
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னை

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ் (வயது 25). இவர் பேக்கரியில் கூலி தொழிலாளியாக பணி செய்து வந்தார். அடிக்கடி மது சாப்பிட்டதால் தீராத வயிற்று வலி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர். முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிய வந்தது. தகவல் அறிந்து. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • வெறிச்சோடிய நெடுஞ்சாலை

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட கடந்த 10-ந் தேதி முதல் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.சாலைகளில் தொடர்ந்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களில் பொது மக்கள் சென்றனர்.

    தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான அலுவல கங்கள், தனியார் நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது, இதனால் எப்போதும் பரபரப்ாக காணப்படும் விக்கிர வாண்டி டோல்கேட் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    • 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.
    • தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி யில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2-ம் கட்டமாக 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சேது நாதன், மயிலம் எம்.எல்.ஏ. சிவகுமார், சேர்மன்கள் சொக்கலிங்கம், யோகேஸ்வரி மணிமாறன்,நிர்மலா ரவிச்சந்திரன், தயாளன், ராஜாராம்,ராஜலட்சுமி வெற்றிவேல் , மாவட்ட பொருளாளர் வக்கீல் ரமணன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் தமிழரசன்,தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, திண்டிவனம் தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    • பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
    • விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து தீபாவளியை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தங்களது பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களி லும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.

    நேற்று மாலை அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் சென்னை யில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வழியாக தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு வழிகள் திறந்து 8 வழிகளில் வாக னங்கள் அனுப்பி வைக்கப் பட்டது. நேற்று மாலையில் இருந்து இரவு 7.30 மணி வரை 35 ஆயிரம் வாகனங்க ளும், நள்ளிரவு கடந்து அதிகாலை 8 மணி வரை 55 ஆயிரம் வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேலும் அசம்பா விதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.
    • அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் தனியார் எடைமேடை அருகில் பட்டாசு கடை உள்ளது. இதனை விக்கிரவாண்டியை சேர்ந்த வாசு (என்கிற) நாகராஜ் நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு 10 மணிக்கு அரசு எம்பலம் பொறித்த கார் ஒன்று வந்தது. அதில் வருமான வரித் துறை என எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி இறங்கினார். பட்டாசு கடையை சுற்றிப் பார்த்த டிப் டாப் ஆசாமி, குழந்தைகளுக்கு தேவையான கலசம், கம்பி மத்தாப்பு, பேன்சி வெடிகள் போன்றவைகளை எடுத்துள்ளார். இதற்கு பில் போட சொன்னார். அவர் எடுத்து வைத்த பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.

    அந்த பில்லினை செக் செய்த டிப் டாப் ஆசாமி, பட்டாசுகளை பார்சல் செய்து காரில் வையுங்கள், நான் ஜிபே செய்கிறேன் என கூறியுள்ளார். அவர் அங்கிருந்த கிஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் போட முயற்சித்தார். அதற்கு சர்வர் பிசி என வந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அமர்ந்து 10 நிமிடம் கழித்து முயற்சித்தார். அப்போது பணம் அனுப்ப முயற்சித்தபோது பெயில்டு என வந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் முயற்சித்தும் பணத்தை அனுப்ப முடியவில்லை. உடனடியாக தனது பர்சை எடுத்த டிப்டாப் ஆசாமி, அதிலிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். அதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே இருந்தது. அங்கிருந்த பட்டாசு கடைக்காரரிடம், பர்சில் குறைவான பணம் மட்டுமே உள்ளது, காரில் பணம் இருக்கிறது, அதை எடுத்து வருகிறேன். அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    இதனை நம்பிய பட்டாசு கடை ஊழியர்கள் பார்சல்களை காரில் ஏற்றினர். காருக்குள் அமர்ந்த டிப்டாப் ஆசாமி, காரிலிருந்த பையை திறந்து பணத்தை எடுப்பது போல பாசாங்கு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், காரினை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார். பட்டாசு கடை ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்குள், டிப் டாப் ஆசாமி வந்த கார் சாலையில் இருந்து மறைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாசு, விக்கிரவாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பட்டாசு கடைக்கு அருகில் இருந்த எடைமேடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். மரக்காணம் அருகே கொள்ளு மேடு விநாய கர்கோவில் தெருவை சேர்ந்த தையல் தொழிலாளர் அய்யப்பன் மனைவி மீனாட்சி (வயது 32) அந்த ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் வழக்கம்போல் மீனாட்சி ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இது பற்றி தகவல் தெரிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சி உடலை கைப்பற்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்து போன மீனாட்சிக்கு10 வயது மற்றும் 7 வயதுடைய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் .தனியார் ஓட்டலில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன மீனாட்சி உடலை வாங்க மருத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    • இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×