என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவையைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு கலெக்டர் பழனி உத்தரவு
சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் மணி (வயது 23). இவர் கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் கட்டைகளுடன் சுற்றினார். மேலும், சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு சிலரின் மீது தாக்குதலும் நடத்தினார்.இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், புதுவை மாநிலத்தை சேர்ந்த மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story






