என் மலர்
விழுப்புரம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவ மலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணி அளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.
மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மயிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார்.
- முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆமூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்வர் அரிகிருஷ்ணன் (வயது 20). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராமல் திரும்பியது. இதில் நிலைதடுமாறிய அரிகிருஷ்ணன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அரிகிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூரில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் வசிப்பவர் சிவச்சரண் (வயது 42). இவர் விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்று மாலை வீட்டிற்கு வந்த சிவச்சரண், வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது மர்மநபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக தப்பியோடினார். இவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் சிவச்சரண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில், பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் , விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் ஸ்ரீ காந்த் தலைமை தாங்கினார். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சிவசேனா முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் தனராஜன் வரவேற்றார் .
டோல் பிளாசாவை கடந்த வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலை துறையினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . உதவி பொறியாளர்கள் வசந்த பிரியா, கவுதம், ராஜ ஸ்வேதா, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி, பழனியம்மாள் , டோல் பிளாசா பி.ஆர்.ஓ., தண்டபாணி,துணை மேலாளர் சொர்ணமணி, போக்குவரத்து காவல் சப்–இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சாலை பணியாளர்கள், டோல் பிளாசா ஊழியர்கள் பங்கேற்றனர் .
விழுப்புரம்:
இருளர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.விழுப்புரம் அருகே நல்லா ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் மனு கொடுத்தார். எனது கணவர் 2014-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றேன்.
அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதையடுத்து பாலியல் புகார் கூறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்கியராஜை சஸ்பெண்ட் செய்து ஷாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடை பெற்றது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை அலுவ லகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.கூட்டத்தில் வானூர் வட்டார பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றியை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் பருவம் ஆரம்பிக்கும் முன் வழங்க வேண்டும். பூச்சிகொல்லி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் நெல் விதையில் அதிக அளவு கலப்பு இருப்பதாகவும் கிளியனூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
தோட்டக்கலை துறை மூலம் சாமந்தி மல்லிகை பூஞ்செடிகள் உரிய பருவத்திற்கு நடவு தரமான விதைகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். புதுகுப்பம் பகுதியில் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மருந்தினை பரிந்துரை செய்ய கேட்டுக்கொண்டனர். திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் மூலம் மானியம் வழங்க வேண்டும் .நெல் கொள்முதல் நிலையங்களை ஜனவரி முதல் வாரத்தில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். முந்திரி கன்றுகள் நடவு செய்ய தரமான கன்றுகளை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.திண்டிவனம் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நாராயண திங்கள், தோட்டக்கலை துறை அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்து திட்டங்கள் குறித்து பேசினர். இதில்தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளான புதுக் குப்பம் ஏழுமலை, கொஞ்சிமங்கலம் கனகராஜ், வானூர் செந்தி ல்குமார், இடையன்சாவடி அய்யப்பன், சேமங்கலம் பழனி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவா,நாகம்மாள் வேலு நைனார்பாளையம் நாராயணசாமி உள்பட விவசாயிகள் கொண்டனர்.இதில் உதவி வேளா ண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, தங்கம், பஞ்சநாதன்,வாச மூர்த்தி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இறுதியாக வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததை தொடர்ந்து துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் மணிமேகலை, மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார், மற்றும் டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் பழனி யை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
- கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாடம் நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பழனி அதிரடி உத்தரவிட்டார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
- சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
மேலும் இவர் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர். பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற 4 பிள்ளைகள் உள்ள நிலையில் 4பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.நேற்று முன் தினம் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் கண்டமங்கலம் எல்லை பகுதியில் உள்ள ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் மலர் மர்மமான முறையில்போர்வை மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை நவமால்மருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்கும் போது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாடு மேய்த்தவர்கள்மூலம் ஊர் பொதுமக்களுக்கு தகவல் காட்டு தீயாய் பரவியது. மேலும் மலரின் தாலி கயிறு பிணம் கிடந்த இடத்தில் இருந்து சுமார்3 மீட்டர் தூரத்தில் கிடந்தது.உடனடியாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் -இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்தங்கம், ஜோன்ஸ் ரவி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மலர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் கொலை செய்யப்பட்ட மலர் கணவர் பாண்டியன் கொலையாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த பாண்டியனை நேற்று காலை 7 மணிக்கு கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- விபரம் வருமாறு.நான் எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு வராததால் கூலி வேலை மற்றும் டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தேன்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த அஞ்சாபுலி மகள் மலர் என்பவரை முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். நான் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். ஊரில் என்னை ஏளனமாக பார்த்து கேவலமாக ஊர்காரர்கள் பேசி வந்தது எனக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அவளை உயிரோடு விட்டால் தொடர்ந்து அசிங்கப்படுத்துவாள் என்பதால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.கடந்த 20- ந் தேதி இரவு சுமார் 9 மணிக்கு டீக்கடையில் இருந்து வீட்டிற்கு வந்து எனது மனைவி மலரிடம் குளிக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னேன். அவள் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாள். எங்களுக்குள் சண்டை வந்தது. அதனால் நான் வீட்டின் முன்பு சுடு தண்ணீர் வைத்து குளித்துவிட்டு படுத்து விட்டேன். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் என் மனைவி மலர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். நான் சிறிது நேரம் கழித்து பின்தொடர்ந்து சென்றேன். அப்போது கோவில் குளம் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் என் மனைவியும் கள்ளக்காதலனும் இருப்பதை நான் பார்த்து விட்டு அருகில் சென்றேன்.என்னை பார்த்ததும் அவளது கள்ளக்காதலன்அங்கிருந்து ஓடி விட்டான் . என் மனைவி சேலையால் அவள் கழுத்தில் பின்புறமாக நின்று கொண்டு இருக்கினேன். எழுந்து திமிறினாள். அவளை கீழே தள்ளி இருக்கினேன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் அவள் இறந்து விட்டால் என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து நடந்து திருவாண்டார்கோவில் சென்று சாராயம் குடித்துவிட்டு பின் நடந்தே விழுப்புரத்தில் நான் வேலை செய்யும் ஓட்டல் முன்பு படுத்து தூங்கிவிட்டேன். என்னை போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர்.பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.தீபாவளி பண்டிகை க்காக வீட்டிற்கு வந்த பாண்டியன் இங்கேயே தங்கி விட்டார். நேற்று முன் தினம் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்ப க்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.இதற்கிடையில் பாண்டியன் நேற்று காலை தனது மகன்களாக கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோருக்கு போன் செய்துள்ளார். மலரை கொலை செய்து விட்டேன், அவளது தாலிக்கயிறை கழுத்தில் இறுக்கி கொன்று, பிணத்தை கரும்பு தோட்டத்திலேயே மூடி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத இருவரும் அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.
இந்நிலை யில்அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் இது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறுது தூரத்தில் தாலி கயிறு கிடந்தது.அங்கு வந்த அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த மலரின் உடலை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து மலரின் வீடுவரை ஓடி சென்று நின்றது. இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மலரின் மகள் மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்கள் கொடுத்த தகவலின்படி பாண்டியனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறை வாகி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பாண்டியனை நேற்று மாலை முதல் தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரை விழுப்புரத்திற்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாக்குமூலம் அளித்த பின்னரே, மலரை அவர் எதற்காக கொலை செய்தார் என்பது தெரி யவரும்.கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.






