search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாலிக்கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது
    X

    தாயின் உடலை பார்த்து கதறி அழுத மகள் மற்றும் உறவினர்களை படத்தில் காணலாம்.

    தாலிக்கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது

    அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர்.பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.தீபாவளி பண்டிகை க்காக வீட்டிற்கு வந்த பாண்டியன் இங்கேயே தங்கி விட்டார். நேற்று முன் தினம் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்ப க்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.இதற்கிடையில் பாண்டியன் நேற்று காலை தனது மகன்களாக கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோருக்கு போன் செய்துள்ளார். மலரை கொலை செய்து விட்டேன், அவளது தாலிக்கயிறை கழுத்தில் இறுக்கி கொன்று, பிணத்தை கரும்பு தோட்டத்திலேயே மூடி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத இருவரும் அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.

    இந்நிலை யில்அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் இது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறுது தூரத்தில் தாலி கயிறு கிடந்தது.அங்கு வந்த அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த மலரின் உடலை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து மலரின் வீடுவரை ஓடி சென்று நின்றது. இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மலரின் மகள் மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்கள் கொடுத்த தகவலின்படி பாண்டியனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறை வாகி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பாண்டியனை நேற்று மாலை முதல் தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரை விழுப்புரத்திற்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாக்குமூலம் அளித்த பின்னரே, மலரை அவர் எதற்காக கொலை செய்தார் என்பது தெரி யவரும்.கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×