search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்  விழுப்புரம் கலெக்டர் உறுதி
    X

    விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளையும், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் படத்தில் காணலாம்.

    விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் விழுப்புரம் கலெக்டர் உறுதி

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×