என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    விழுப்புரம்:

    இருளர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.விழுப்புரம் அருகே நல்லா ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் மனு கொடுத்தார். எனது கணவர் 2014-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றேன்.

    அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதையடுத்து பாலியல் புகார் கூறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்கியராஜை சஸ்பெண்ட் செய்து ஷாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார்.

    விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடை பெற்றது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை அலுவ லகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.கூட்டத்தில் வானூர் வட்டார பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றியை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் பருவம் ஆரம்பிக்கும் முன் வழங்க வேண்டும். பூச்சிகொல்லி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் நெல் விதையில் அதிக அளவு கலப்பு இருப்பதாகவும் கிளியனூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    தோட்டக்கலை துறை மூலம் சாமந்தி மல்லிகை பூஞ்செடிகள் உரிய பருவத்திற்கு நடவு தரமான விதைகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். புதுகுப்பம் பகுதியில் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மருந்தினை பரிந்துரை செய்ய கேட்டுக்கொண்டனர். திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் மூலம் மானியம் வழங்க வேண்டும் .நெல் கொள்முதல் நிலையங்களை ஜனவரி முதல் வாரத்தில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். முந்திரி கன்றுகள் நடவு செய்ய தரமான கன்றுகளை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.திண்டிவனம் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நாராயண திங்கள், தோட்டக்கலை துறை அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்து திட்டங்கள் குறித்து பேசினர். இதில்தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளான புதுக் குப்பம் ஏழுமலை, கொஞ்சிமங்கலம் கனகராஜ், வானூர் செந்தி ல்குமார், இடையன்சாவடி அய்யப்பன், சேமங்கலம் பழனி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவா,நாகம்மாள் வேலு நைனார்பாளையம் நாராயணசாமி உள்பட விவசாயிகள் கொண்டனர்.இதில் உதவி வேளா ண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, தங்கம், பஞ்சநாதன்,வாச மூர்த்தி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இறுதியாக வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததை தொடர்ந்து துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் மணிமேகலை, மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார், மற்றும் டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் பழனி யை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாடம் நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பழனி அதிரடி உத்தரவிட்டார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
    • சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர். பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற 4 பிள்ளைகள் உள்ள நிலையில் 4பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.நேற்று முன் தினம் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் கண்டமங்கலம் எல்லை பகுதியில் உள்ள ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் மலர் மர்மமான முறையில்போர்வை மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை நவமால்மருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்கும் போது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாடு மேய்த்தவர்கள்மூலம் ஊர் பொதுமக்களுக்கு தகவல் காட்டு தீயாய் பரவியது. மேலும் மலரின் தாலி கயிறு பிணம் கிடந்த இடத்தில் இருந்து சுமார்3 மீட்டர் தூரத்தில் கிடந்தது.உடனடியாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் -இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்தங்கம், ஜோன்ஸ் ரவி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மலர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் கொலை செய்யப்பட்ட மலர் கணவர் பாண்டியன் கொலையாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த பாண்டியனை நேற்று காலை 7 மணிக்கு கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- விபரம் வருமாறு.நான் எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு வராததால் கூலி வேலை மற்றும் டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தேன்.

    கடந்த 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த அஞ்சாபுலி மகள் மலர் என்பவரை முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். நான் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். ஊரில் என்னை ஏளனமாக பார்த்து கேவலமாக ஊர்காரர்கள் பேசி வந்தது எனக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அவளை உயிரோடு விட்டால் தொடர்ந்து அசிங்கப்படுத்துவாள் என்பதால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.கடந்த 20- ந் தேதி இரவு சுமார் 9 மணிக்கு டீக்கடையில் இருந்து வீட்டிற்கு வந்து எனது மனைவி மலரிடம் குளிக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னேன். அவள் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாள். எங்களுக்குள் சண்டை வந்தது. அதனால் நான் வீட்டின் முன்பு சுடு தண்ணீர் வைத்து குளித்துவிட்டு படுத்து விட்டேன். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் என் மனைவி மலர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். நான் சிறிது நேரம் கழித்து பின்தொடர்ந்து சென்றேன். அப்போது கோவில் குளம் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் என் மனைவியும் கள்ளக்காதலனும் இருப்பதை நான் பார்த்து விட்டு அருகில் சென்றேன்.என்னை பார்த்ததும் அவளது கள்ளக்காதலன்அங்கிருந்து ஓடி விட்டான் . என் மனைவி சேலையால் அவள் கழுத்தில் பின்புறமாக நின்று கொண்டு இருக்கினேன். எழுந்து திமிறினாள். அவளை கீழே தள்ளி இருக்கினேன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் அவள் இறந்து விட்டால் என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து நடந்து திருவாண்டார்கோவில் சென்று சாராயம் குடித்துவிட்டு பின் நடந்தே விழுப்புரத்தில் நான் வேலை செய்யும் ஓட்டல் முன்பு படுத்து தூங்கிவிட்டேன். என்னை போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர்.பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.தீபாவளி பண்டிகை க்காக வீட்டிற்கு வந்த பாண்டியன் இங்கேயே தங்கி விட்டார். நேற்று முன் தினம் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்ப க்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.இதற்கிடையில் பாண்டியன் நேற்று காலை தனது மகன்களாக கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோருக்கு போன் செய்துள்ளார். மலரை கொலை செய்து விட்டேன், அவளது தாலிக்கயிறை கழுத்தில் இறுக்கி கொன்று, பிணத்தை கரும்பு தோட்டத்திலேயே மூடி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத இருவரும் அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.

    இந்நிலை யில்அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் இது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறுது தூரத்தில் தாலி கயிறு கிடந்தது.அங்கு வந்த அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த மலரின் உடலை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து மலரின் வீடுவரை ஓடி சென்று நின்றது. இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மலரின் மகள் மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்கள் கொடுத்த தகவலின்படி பாண்டியனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறை வாகி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பாண்டியனை நேற்று மாலை முதல் தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரை விழுப்புரத்திற்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாக்குமூலம் அளித்த பின்னரே, மலரை அவர் எதற்காக கொலை செய்தார் என்பது தெரி யவரும்.கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தெற்கு வீதியில் வசிப்பவர் பழனி (வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.இவரது வீட்டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு இன்று காலை சென்றவர்கள், பழனி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பழனிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் திரு வண்ணாமலையில் இருந்து ஏனாதிமங்கலத்திற்கு பழனி விரைந்து வந்தார். மேலும், திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசாருடன் வீட்டிற்குள் சென்ற பழனி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.

    மேலும், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் செல்வராஜ் தலைமை யிலான குழுவினரும், மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் ராக்கி யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும், கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர்.மேலும், பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால், அந்த வீடுகளில் திருட்டு சம்பவம் ஏதும் நடக்கவில்லை.காய்கறி வியாபாரி பழனி, வீட்டினை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட் டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்தின் வழி யாக வந்து, கதவினை உடைத்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித் திருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவம், அருகில் இருந்த 2 வீடுகளில் திருட முயற்சி ஆகிய சம்பவங்கள் ஏனாதி மங்கலம் கிராம மக்களி டையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

    மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பூங்காவனம் (வயது 41). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 8-ம் வகுப்பு பயிலும் ரம்யா என்ற பெண் குழந்தையும், 3-ம் வகுப்பு பயிலும் கோகுலகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் திண்டிவனம் கலால் துறையில் 5 வருடமும், செஞ்சி ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு வருடமும் துணை தாசில்தாராக பணி செய்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக செஞ்சி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டார். செஞ்சி அருகே காரையில் குடியிருக்கும் பூங்காவனம் அங்கிருந்து தினமும் மேல்மலையனூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவ ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள், பூங்கா வனம ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துணை தாசில்தார் பூங்காவனம் மயங்கி விழுந்த கிடந்த இடத்திற்கு அருகே வயல்வெளிக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து பாட்டீல் இருந்ததை கண்டறிந்தனர்.மேலும், அவர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுட ன்தான் உறுதியாக கூறமுடியு மென டாக்டர்கள் தெரிவித்தனர். துணை தாசில்தார் பூங்காவனம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டா ரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலகத்தின் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார்விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில், நூலக வார விழாவில் அதிகப்ப டியான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் வாசிப்பு திறனும் மேம்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவர்க ளிடையே நடத்தப்பட்டது.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். ஏனென்றால், புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதால் ஒவ்வொருவரும் கட்டாயம் நூலகத்திற்கு சென்று வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட மைய நூலகத்திற்கு சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி அமைக்க விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள ப்படும். மேலும், நூலகத்திற்கு மாணவ மாணவி யர்கள் டிஜிட்டல் முறையான கணினி நூலகம் அமைத்திடும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் அமைத்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார். 2-ம் கருவறை நூலகம், வாசித்தேன் வளர்ந்தேன், மேல்நிலை வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பு என்ற தலைப்புகளில் நடந்த கட்டுரை போட்டி, பசுமை இந்தியா கனவு இந்தியா என்ற துலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டதுஇதில் கூடுதல் கலெக்டர் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செ ல்வி பிரபு, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் வேல்முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான பஸ் மொரட்டாண்டி டோல்கேட் அருகே இருந்த மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட டிரைவர் இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுத்தார். மேலும், பஸ்சிற்கு அருகில் காலியான மதுபாட்டீல்களும் கிடந்தன.

    இது குறித்து ஆரோவில் போலீசாரிடம் தனியார் பள்ளியில் முதல்வர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீப காலமாக வானூர், ஆரோவில் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் மணி (வயது 23). இவர் கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் கட்டைகளுடன் சுற்றினார். மேலும், சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு சிலரின் மீது தாக்குதலும் நடத்தினார்.இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில், புதுவை மாநிலத்தை சேர்ந்த மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×