திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார்.முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆமூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்வர் அரிகிருஷ்ணன் (வயது 20). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராமல் திரும்பியது. இதில் நிலைதடுமாறிய அரிகிருஷ்ணன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அரிகிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com