மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்சின் கண்ணாடி உடைப்பு ஆரோவில் போலீசார் விசாரணை

மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்சின் கண்ணாடி உடைப்பு ஆரோவில் போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான பஸ் மொரட்டாண்டி டோல்கேட் அருகே இருந்த மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட டிரைவர் இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுத்தார். மேலும், பஸ்சிற்கு அருகில் காலியான மதுபாட்டீல்களும் கிடந்தன.

இது குறித்து ஆரோவில் போலீசாரிடம் தனியார் பள்ளியில் முதல்வர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மதுபோதையில் மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீப காலமாக வானூர், ஆரோவில் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com